Saturday 25 June 2011

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகும் ஹீனா ரப்பானி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய வெளியறவு துறை அமைச்சராக ஹீனா ரப்பானி கர் (34) நியமிக்கப்படவுள்ளார்.


பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சரவை மாற்றம் நடந்தது. அப்போது வெளியுறவு துறை மந்திரியாக இருந்த ஷா மொகமத் குரேஷி நீக்கப்பட்டார். அதன் பின்னர் அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.
வெளியுறவு இணை அமைச்சராக உள்ள ஹீனா தான் அந்தப் பொறுப்பை கவனித்து வருகிறார். இந் நிலையில் அவரையே அந்தத் துறையின் கேபினட் அமைச்சராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஹீனா ரப்பானி அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை மாலிக் குலாம் நூர் ரப்பானி கர் மூத்த அரசியல்வாதியாவார். முன்னாள் அதிபர் முஷ்ரப் ஆட்சி காலத்தில் ஹீனா ரப்பானி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-கியூ கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2008-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்தார்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். விரைவில் வெளியுறவு துறை அமைச்சராகும் இவர் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளார். டெல்லியில் நடக்கவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையில் இவர் பங்கேற்கவுள்ளார்.

No comments:

Post a Comment