Saturday 25 June 2011

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மன்னிக்க வேண்டும் : சபாநாயகருக்கு ஆ. ராசா கடிதம்

பாராளுமன்ற எம்.பி.க்களில் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, மதுகோடா, கனிமொழி ஆகிய 4 பேர் டெல்லி திகார் ஜெயிலில் உள்ளனர். ஆ.ராசா, கனிமொழி இருவரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாகவும், சுரேஷ் கல்மாடி காமல் வெல்த் போட்டி ஊழல் தொடர்பாகவும் மதுகோடா முறைகேடான சொத்து குவிப்பு காரணமாகவும் கைது செய்யப்பட்டனர்.

பாராளுமன்ற எம்.பி. ஒருவர் தொடர்ந்து 60 நாட்களுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால், அவர் எம்.பி. பதவியை இழக்க நேரிடும். எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏதாவது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மதுகோடா எம்.பி. கடந்த ஆண்டு லக்னோ சிறப்புக் கோர்ட்டின் அனுமதி பெற்று சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி, கனிமொழி ஆகியோரும் கோர்ட்டில் அனுமதி பெற்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று மத்திய மந்திரி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆ.ராசா, சுரேஷ் கல்மாடி இருவரும் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாருக்கு கடிதம் எழுதி உள்ளனர். சுரேஷ் கல்மாடி தனது கடிதத்தில் பாராளுமன்ற மழைகால கூட்டத்ததொடரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆ.ராசா தனது கடிதத்தில், பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனதற்காக மன்னிக்க வேண்டும். என்னை மீறிய சூழ்நிலைகள் காரணமாக நான் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள இயல வில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கிடையே ஆ.ராசா கடிதம் வந்திருப்பதை சபாநாயகர் அலுவலக அதிகாரிகள் உறுதி செய்தனர். அவர்கள் கூறுகையில், சிறைத்தண்டனை பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமானால் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அவர்களுக்கு சபாநாயகர் அனுமதி அளிக்க இயலாது என்றனர்.  

No comments:

Post a Comment