Saturday 25 June 2011

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21% அதிகரிப்பு

மும்பை : 2010ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்து 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது.


இதன்மூலம் உலகளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.


இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சியடைந்தது. பங்குகளின் சந்தை மதிப்பு 24 சதவீதம் அதிகரித்து 1,63,180 கோடி டாலராக உயர்ந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும்.

இதனால் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் 21 சதவீதம் அதிகரித்து, 1,53,000 ஆக உயர்ந்தது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ.6.89 லட்சம் கோடியாகும்.

இதன்மூலம் அதிக கோடீஸ்வரர்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியா 12வது இடத்தை பிடித்துள்ளது. 31 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 2010ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 8.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. 17 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது.

5.35 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள சீனா நான்காவது இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment