Saturday, 25 June 2011

பொது மருந்துகளால் முதியவர்களுக்கு உயிரிழப்பு அபாயம்: ஆய்வுத் தகவல்

ஆயிரக்கணக்கான முதியவர்கள் தங்களுக்கு பழக்கமான பொது மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் அவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.


அலர்ஜி, வலி நிவாரணி மற்றும் ரத்த ஓட்டத்தை இழக்கச் செய்தல் போன்றவற்றிற்கு மாத்திரைகளை பயன்படுத்துபவர்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பொதுவான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மாத்திரைகளால் மூளைப்பகுதியில் நினைவு இழப்பு நிலையும், சில நேரங்களில் மரணத்தையும் முதியவர்களுக்கு ஏற்படுத்துகிறது என ஆய்வாளர்கள் கூறினர்.

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 80 மருந்துகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது அந்த மருந்துகளால் முதியவர்களுக்கு மூளைப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருப்பது தெரியவந்தது. மேலும் நியூரோட்ரான்ஸ் மீற்றரை தடுப்பதாகவும் உள்ளது. இந்த நியூரோட்ரான்ஸ் மீற்றர் அசிட்டைல்கோலன் என அழைக்கப்படுகிறது.

இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் அமெரிக்க முதியோர் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களிடம் பிரிட்டன் பகுதியில் வசிப்பவர்களிடம் நடத்தப்பட்டது. மொத்தம் 13 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment