Saturday 25 June 2011

ஜப்பான்:நிலநடுக்க சேதம் ரூ.10 லட்சம் கோடி

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் மிகக் கடுமையான நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.

இதில் விவசாய, மீன்பிடி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.சாலை, மேம்பாலங்கள், வீடுகள் போன்றவை முற்றிலுமாக அழிந்தன.மேலும், அணு உலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டதால் கதிர் வீச்சு வெளியானது.

இந்த நிலையில்,இந்த பூகம்பம் மற்றும் சுனாமி ஆகியவற்றால் ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பை சேகரித்து கணக்கிட்டு வந்த ஜப்பான் அரசு,மொத்த சேத மதிப்பு ரூ.10 லட்சத்து 49 ஆயிரம் கோடி என அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment