Saturday 25 June 2011

ஈராக்கில் அதிவேக ரயில்: பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் அமைக்கிறது

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து பஸ்ரா வரை அதிவேக ரயில் இயக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தை பிரான்ஸ் அல்ஸ்டோம் நிறுவனம் மேற்கொள்கிறது.


இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக அல்ஸ்டோம் மற்றும் ஈராக் ரயில்வே இடையே பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பாரிஸ் சர்வதேச விமான கண்காட்சியில் போக்குவரத்து துறை இளநிலை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை அல்ஸ்டோம் செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்தார். ரயில் கட்டுமானம், ரயில் பாதை மற்றும் ரயில் சேவை பணிகளிலும் அல்ஸ்டோம் ஈடுபடுகிறது என செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

புதிய அதிவேக ரயில் திட்டம் 650 கிலோ மீற்றர் ரயில் வலையமைப்பை கொண்டது. இதில் மணிக்கு 250 கி.மீ வேகத்தில்(135மைல்) ரயில்கள் இயக்கப்படும். ஈராக்கில் அதிவேக ரயில் திட்டம் மேற்கொள்வது தொடர்பாக இருதரப்பிலும் 12 மாத கால பேச்சு வார்த்தை நடைபெற்றது.

அதிவேக ரயில் பாக்தாத், பஸ்ரா, கர்பலா, நஜப், மவுசாயெப் மற்றும் சமாவக் நகரங்களை இணைப்பதாக இருக்கும். பிரான்ஸ் அமைச்சர் மாரியானி செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஈராக் சென்று ஒப்பந்த விவரம் குறித்து பேசுகிறார்.

இத்திட்டத்திற்கான நிதி விவரம் அறிவிக்கப்படவில்லை. கடந்த மே மாதம் ஈராக்கில் தரம் உயர்த்தப்பட்ட கணணி ரயில் வலையமைப்பை 25 கி.மீ வரை மேற்கொள்வதாக அல்ஸ்டோம் தெரிவித்தது.

No comments:

Post a Comment