Sunday 26 June 2011

உலகின் முதன் முறையாக 7 வயது சிறுமிக்கு மூன்று செயற்கை இதயங்கள்

Muthupet PFI -- JUNE 26
உலக நாடுகளில் பெரும் மருத்துவ சாதனையை எட்டிய நோயாளியாக 7 வயது சிறுமி ஹன்னா அட்னன் உள்ளாள்.


இவரது உயிரை காப்பாற்றுவதற்கு மூன்று முறை செயற்கை இதயங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஹன்னா எடின்பர்க் பகுதியைச் சேர்ந்தவர்.

இந்த சிறுமிக்கு ஏற்பட்ட இதய நோய் காரணமாக உடலுக்கு வெளியே செயல்படும் உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டது. இப்படி உடலுக்கு வெளியே பொருத்துவதால் நோயாளிக்கு பக்கவாதம் போன்ற அபாய நிலைகள் ஏற்படும்.

எனவே இதய நோயாளிகளுக்கு மிகச்சிறிய அளவு நேரமே இந்த செயற்கை இதயம் வெளிப்பகுதியில் பொருத்தப்படும். இதய நோய் பாதித்த ஹன்னா உடலில் இருந்த எதிர் உயிரி புரதம் புதிதாக பெறப்பட்ட இதயத்தை ஏற்கவில்லை.

இப்பிரச்சனையை சரி செய்ய விசேடமான எகுலி சுமாப் என்ற மருந்து தரப்பட்டது. இதற்கு முன்னர் இது நோயாளிக்கு பயன்படுத்தப்பட்டது இல்லை. கடந்த 5 வாரங்களுக்கு முன்னர் நியூகேசிர் ப்ரீமென் மருத்துவமனையில் இதய மாற்று சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஹன்னா குணம் அடைந்து வருகிறார். அவரது பெற்றோர் அட்னன் சுனபர், ஹீமேரா அட்னன் ஆவார்கள். இவர்கள் எடின்பர்க்கின் லெய்த் பகுதியில் வசிக்கின்றனர். சுனபர் டாக்சி டிரைவராக உள்ளார்.

No comments:

Post a Comment