முந்தைய ஆண்டை காட்டிலும் 2011ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து புகலிடம் தேடி வேறு இடம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளது.
இடம் பெயர்ந்த மக்களுக்கு வழிகாட்டும் அமைப்பான சர்வதேச அகதிகள் அமைப்பு இதனை தெரிவித்து உள்ளது. 2011ஆம் ஆண்டில் முதல் 5 மாதங்களில் 91 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 42 ஆயிரம் பேர் மட்டுமே ஆப்கானிஸ்தானில் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி உள்ளனர் என சர்வதேச அகதிகள் வழி நடத்தல் அமைப்பாளர் லின் யோஷிகவா தெரிவித்தார்.
அகதிகளாக வந்த மக்கள் மிக நெரிசலான இடங்களில் இருக்க வேண்டி உள்ளது. அவர்கள் கூடாரத்திற்கு வெளியே தங்கள் இடங்களை பகிர்ந்து கொள்ள வேண்டி உள்ளது. மருத்துவ வசதிகளும் மிக சிறிய அளவிலேயே உள்ளது என்று யோஷிகோவா தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு புகலிட கூடாரங்கள் உள்ள பகுதிகளுக்கு யோஷிகோவா இந்த ஆண்டு துவக்கத்தில் சென்றார். அப்போது அகதிகள் வசிக்கும் மோசமான சூழ்நிலைகளை அவர் புகைப்படம் பிடித்தார்.
அவர்களது மோசமான வாழ்விட நிலைகளையும் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை நீடிக்கிறது. இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment