Sunday, 26 June 2011

வெளியூர்களில் மின்வெட்டு நேரம் 3 மணியிலிருந்து 1.30 மணி நேரமாகக் குறைப்பு

சென்னை: சென்னை தவிர வெளியூர்களில் மின்வெட்டு நேரத்தை 1.30 மணி நேரமாகக் குறைத்துள்ளது தமிழக அரசு.


கடந்த ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் தொழில்கள், விவசாய பணிகள் கடும் பாதிப்பு அடைந்தது.


படிப்படியாகக் குறைப்பு

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றதும் தமிழ்நாட்டில் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மின்வெட்டை குறைக்க நடவ டிக்கை மேற்கொண்டார். அதன்படி மின் கட்டமைப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் நீர் மின் நிலையங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் அதிகரித்துள்ளது. இதனால் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு என்பது இல்லை. குறிப்பிட்ட 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் நிறுத்தப் படுகிறது.

காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் வெளியூர்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதில்லை. மின் உற்பத்தி குறையும் சமயத்தில் மட்டும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வருகிற 1-ந்தேதி முதல் மின்வெட்டை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை தவிர வெளியூர்களில் 3 மணி நேர மின் வெட்டு 1.30 மணி நேரமாக குறைக்கப்படுகிறது.

எனவே வருகிற 1-ந்தேதி முதல் மதுரை, கோவை, ஈரோடு, வேலூர், விழுப்புரம் போன்ற நகரங்களில் மின்சார வெட்டு 1.30 மணி நேரமாக குறையும்.

No comments:

Post a Comment