Saturday, 16 July 2011

ஒலிம்பிக்கும் சில மர்ம விடயங்களும்.


லண்டன் மாநகரம் 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தற்போது மும்முரமகாக ஆயத்தமாகி வருகிறது. இதில் மிக முக்கியமான அம்சமான ஒலிம்பிக் தீப்பந்தமும் அதைச் சுமந்த ஓட்டமும் 2012 மே 18 இல் இடம்பெற இருக்கிறது. இது ஒரு ஒலிம்பிக் சம்பிரதாயமாக பின்பற்றபடுகிறது.
 அதைப் பற்றி சில உண்மைகள்...

கிரேக்க புராணங்களில்  பிரமீதீயஸ் ( Prometheus ) என்ற காதாபாத்திரம் ஒன்று உள்ளது,அதில் இந்த பிரமீதீயஸ் ( Prometheus ) இரண்டாம்  தலைமுறை டைடன் ( Titan ) ஆவான். இவன்  கிரேக்க பெரிய கடவுளான சியஸ்சிடமிருந்து ( Zues ) நெருப்பை திருடி மக்களுக்கு வழங்கியதாக ஒரு கதை உள்ளது.நெருப்பானது கிரேக்க புராணங்களில் புனித தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது,காரணம் அதை அவர்கள் சூரியக்கடவுளின் உடம்பின் ஒரு பாகமாக அவர்கள் நினைக்கின்றனர். பிரமீதீயஸ் ( Prometheus ) நெருப்பை திருடி மக்களுக்கு வழங்கியதால் மக்களிடம் அவருக்கு சிறந்த இடம் வழங்கப்பட்டுள்ளது காரணம் நெருப்பு அனைத்தையும் புனிதமாக்குவதாகவும்  மக்களை கடவுள் அந்தஸ்துக்கு உயர்த்துவதாகவும் கிரேக்க புராணங்களில்  நம்பிக்கை உள்ளது.இதனால் இரகசிய சமுதாயத்தவர்களிடம் ( FREE MASONS ) இந்த  பிரமீதீயஸ் ( Prometheus ) க்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது.

இந்த கிரேக்க கற்பனை கதையை பின்பற்றியே ஒலிம்பிக்கில் தீப்பந்தம் ஏற்றப்படுகிறது.இதை அறியாமல் நம் முஸ்லிம் பாடசாலைகளிலும் இந்த கற்பனை கதை பின்பற்றப்படுகிறது என்பது மிகவும் வருந்தத்தக்கது.




 எவ்வளவுதான் நவீன உலகம் ஹிட்லரை சபித்தாலும் இன்று அவர்கள் செல்வது ஹிட்லரின் வழியில்தான் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன,அவற்றில் ஒன்றுதான் இந்த ஒலிம்பிக் தீப்பந்தம்.இந்த ஒலிம்பிக் தீப்பந்த கலாச்சாரம் துவங்கியது ஹிட்லரின் காலத்தில் தான்.1936 இல் பெர்லினில் இடம்பெற்ற ஒலிம்பிக்கிலே இது முதன் முதலாக அறிமுகபடுத்தப்பட்டது.ஹிட்லர் யூத இரகசிய சமூகங்களை ( FREE MASON ORGANIZATION ) தடை செய்தாலும் அவர் இரகசிய சமூக விடயங்களில் பூரண நம்பிக்கை வைத்திருந்தார்.


Munich கை தலைமையகமாக கொண்ட ஒரு நாசி இரகசிய சமூதாயம் ஒன்று இருந்தது.இது The Thule Society என அழைக்கப்பட்டது.ஏனைய இரகசிய சமூகங்களுக்கும் இதற்கும் வெளிப்படையாக வேறுபாடுகள் இருந்தாலும் இவற்றின் உள்நோக்கமோ ஒன்றாகவே இருந்தது.இதன்  இலட்ச்சினை தற்போது சட்டரீதியாக ஜெர்மனியில் தடை சய்யப்பட்டுள்ளது.

 
இந்த பிரமீதீயஸ் ( Prometheus ) கட்டுக்கதையும் லூசிபர் ( LUSIFAR ) சம்பந்தமான கட்டுக்கதையும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது.லத்தீன்  மொழியில் லுசிபார் என்றால் ஒளியை சுமந்தவன் என்று அர்த்தம்.சுவர்கத்திளிருந்து லுசிபாரை இறைவன் விரட்டும் போது அவன் ஒரு ஒளிவெள்ளத்தை பூமிக்கு கொண்டுவந்ததாக கதை உள்ளது.

இன்று மக்கள் இந்த ஒலிம்பிக் தீப்பந்தம் தொடர்பான மறைவான விடயம் பற்றி அறியாமல் இதை பெரிய விழாவாக கொண்டாடுகின்றனர்.இன்று உலகை ஆளும் இந்த இலுமிணாடிக் கூட்டம் தமது இரகசிய சமுதாய சடங்குகளை மிக வெற்றிகரமாக நடத்துகின்றனர்.அதை அறியாது நாமும் அதில் கலந்துகொள்கிறோம்,கைதட்டுகிறோம்.நம் பாடசாலைகளில் பின்பற்றுகிறோம்.

 2012 ஒலிம்பிக்கில் சம்மந்தமான  சில விசித்திரமான படங்கள்
SOME INTERESTING PHOTOS.
                  பிரமிட் வடிவிலான  ஒளி விளக்குகள்

                                                  ஒற்றைக்கண் MASCOTS

No comments:

Post a Comment