டெல்லி: வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை
செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக
நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்த புதிய பதவியை ஏற்றுக்கொள்வார்
என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில்
தெரிவித்தார்.
மீரா சங்கரை அடுத்து நிருபமா ராவை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்க அரசு கடந்த மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது.
நிருபமா
ராவ் 1973-ம் ஆண்டு ஐஎப்எஸ் பேட்சை சேர்ந்தவர். அவர் 1-8-2009 அன்று
வெளியுறவுத் துறைச் செயலாளராக ஆனார். இந்த பதவியை வகிக்கும் 2-வது பெண்
என்ற பெருமையைப் பெற்றார். சோகிலா ஐயர் தான் இந்தியாவின் முதல் பெண்
வெளியுறவுத்துறை செயலாளர் ஆவார்.
நிருபமா கடந்த டிசம்பர் மாதமே
ஓய்வு பெறவேண்டியது. வெளியுறவுத் துறை செயலாளரின் பதவிக்காலத்தை அரசு 2
ஆண்டுகளாக்கியதை அடுத்து அவரின் பதவிக்காலம் இந்த மாத இறுதி வரை
நீட்டிக்கப்பட்டது.
நிருபமா ராவ் பல்வேறு முக்கியப் பதவிகள் வகித்தவர். அவர் சீனா, இலங்கை உள்பட பல நாடுகளுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார்.
No comments:
Post a Comment