Saturday 16 July 2011

மோசடி வழக்கில் சிக்கினார் வடிவேலு!

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

 அப்புகார் மனுவில்,  ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை ஒரு இணையதள ஆசிரியர் செல்வகுமார் போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.

இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் மனு அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில், ‘’நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. கலை நிகழச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment