Saturday 16 July 2011

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் : எஸ்.ஐ.டி யின் புதிய தலைவராக ஜெ.வி.ராமுடு நியமனம்

அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)விற்கு புதிய தலைவராக ஜெ.வி.ராமுடு நியமிக்கப்பட்டுள்ளார்.


எஸ்.ஐ.டியின் தலைவராக இருந்த சத்யபால் சிங் தலைமை பதவியிலிருந்து மாறியதை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றம் ராமுடுவை தலைவராக நியமித்துள்ளது. 1981-ஆம் ஆண்டு ஆந்திரமாநில ஐ.பி.எஸ் பேட்சை சார்ந்த ராமுடு இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் கொலை வழக்கை விசாரிக்க தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள மூன்றாவது ஐ.பி.எஸ் அதிகாரியாவார்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிலர் வாக்கு மூலத்தை மாற்றியது குறித்து வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல், அபிலாஷ குமாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கவலையை தெரிவித்தது. முந்தைய விசாரணையின் போது விசாரணை பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சத்யபால் சிங் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் மத்திய அரசின் அபிப்ராயத்தை கேட்டது. மத்திய அரசு சத்யபால்சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது. புதிய எஸ்.ஐ.டி தலைமை பதவிக்கு பீகார் கேடரில் ராஜேஷ் ரஞ்சன், மத்திய பிரதேச கேடரில் ஆர்.சி.அரோரா, ஆந்திர பிரதேசத்தை சார்ந்த ஜெ.வி.ராமுடு ஆகியோரின் பெயரை பரிந்துரைத்தது.

பின்னர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள அதிகாரிகளின் அனுமதியை பெற மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமுடு விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததை துணை சோலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment