Saturday 16 July 2011

மொபைல்போனில் 24 மணிநேர மருத்துவ ஆலோசனை: ஸ்பைஸ் வழங்குகிறது

Spice Mobile

டெல்லி: மொபைல்போன் மூலம் 24 மணிநேரமும் மருத்துவ ஆலோசனை வழங்கும் புதிய சேவையை ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் துவங்குகிறது.

இந்தியாவில் சுகாதார வசதிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெறவில்லை. குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன.

எனவே, அனைத்து தரப்பு மக்களும் உரிய மருத்துவ ஆலோசனைகளை மொபைல்போன் மூலம் பெறும் விதத்தில், ஜியோ ஹெல்தி என்ற புதிய மருத்துவ சேவையை ஸ்பைஸ் நிறுவனம் துவங்குகிறது.

இந்த சேவையை ஸ்பைஸ் வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் பெறலாம். மற்ற நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனை திட்டத்துக்கும் இதற்கும் முக்கிய வேறுபாடு உண்டு.



மற்ற நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ சேவை திட்டங்களில், மருத்துவ துறையை சார்ந்தவர்கள் ஆலோசனைவழங்குவர்.

ஆனால், ஸபைஸ் மருத்துவ சேவை திட்டத்தில், டாக்டர்களே மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமின்றி, வாடிக்கையாளர் தங்களது அடையாளங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இத்திட்டத்தின் சிறப்பு.

மருத்துவ துறை சம்பந்தமான தகவல்கள், சந்தேகங்கள் மற்றும் டாக்டரின் ஆலோசனைகளை இந்த சேவையின் மூலம் பெறலாம்.

இது கட்டண சேவை என ஸ்பைஸ் தெரிவித்துள்ளது. ஜியோ ஹெல்தி சேவை வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் தருவதாக அமையும் என்று ஸ்பைஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment