Tuesday, 12 July 2011

ஆப்கான் அதிபரின் சகோதரர், மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை

ஆப்கான் அதிபர் ஹமித் கர்சாயின் இளைய சகோதரர் அஹமது வாலி கர்சாய் அவரது மெய் பாதுகாவலரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


(அஹமது ஆலி கர்சாய்- 2010)

விருந்தினர் ஒருவரை வீட்டுக்கு வரவேற்றுக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக அவர் மீது கொலை முயற்சி நடந்து வந்ததாக கூறியுள்ள ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி, இக்கொலைக்கு அவரது பாதுகாப்பு பணியில் இருந்தவர்களே காரணம் என கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் சார்கோஸி, ஆப்கானில் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்கு நிலைகொண்டிருக்கும் பிரெஞ்சு படைகளையும், ஆப்கான் அதிபர் ஹமீட் கர்சாய் ஐயும் சந்தித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இக்கொலை நடந்துள்ளது.

ஆப்கான் அதிபருடன், சார்கோஸி

ஆப்கானில் பிரசித்தம் வாய்ந்த அபின் வர்த்தகத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார் எனவும் தலிபான்களுக்கு கிளர்ச்சி நிதி செல்ல காரணமாக இருந்தார் எனவும் அஹ்மட் வாலி கர்சாய் மீது குற்றச்சாட்டு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment