Tuesday 12 July 2011

பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் குஜராத் கட்சிகள்

ஆமதாபாத் : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டன.


பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ்தான் அம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள். இதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நரபலி நரேந்திர மோடி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக முதல்வராக பதவியில் இருக்கிறார்.

மோடியின் ட்சியை முன்வைத்து வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்று பாஜக மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்று அக்கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எந்தவொரு சிறு விஷயத்திலும்கூட கட்சியினர் கவனம் செலுத்தி ஆதரவு திரட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு எதிராக முக்கிய ஆயுதமாக ஊழலை எடுத்துள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த எவரும் ஊழல் எதிலும் ஈடுபடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதே போல் நரபலி  நரேந்திர மோடியின் ஆட்சியில் நடந்த மத கலவரங்கள், தீண்டாமை போன்றவைகளை முன்வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

கடந்த காலங்களில் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த தலைவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதிலும் கட்சி ஈடுபட்டுள்ளது.சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த பாலு தந்தி என்ற தலைவர் லேவா படேல் வகுப்பினரிடையே கணிசமான ஆதரவாளர்கள் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். கடந்த வாரம் மீண்டும் இவர் கட்சியில் இணைந்தார். 

கட்சியில் போர்க்கொடி தூக்கிய சுனில் ஓஜா என்ற மற்றொரு முன்னாள் எம்.எல்.ஏ. விரைவில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் எனத் தெரிகிறது.இவர்களைப் போன்ற உள்ளூரில் செல்வாக்குள்ள தலைவர்கள் மீண்டும் கட்சியில் இணைவதன் மூலம் கட்சி ஆதரவைப் பெருக்க உதவுகின்றனர் என குஜராத் பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். 

தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் அனைத்துத் தொகுதிகளையும் முழுவதுமாக ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது அக்கட்சி. மாநிலத்திலுள்ள 182 தொகுதிகளில் ஆயிரத்து எண்ணூறு பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஐ.கே. ஜடேஜா கூறினார்.

No comments:

Post a Comment