Tuesday 12 July 2011

புதிய மத்திய அமைச்சரவை விபரங்கள்!

மத்திய அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை மாற்றி அமைக்கப்படுவதுடன், புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மாலை ஐந்து மணியளவில் பதவியேற்கவுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள விபரங்கள் :


வெற்றிடமாக இருந்த ரயில்வே துறையை, திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த தினேஷ் திரிவேதி பொறுப்பேற்கிறார். ஜெய்ராம் ரமேஷ் கிராமப்புற மேம்பாட்டு துறையையும், விலாஷ் ராவ் தேஷ்முக் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும் பொறுப்பேற்கின்றனர். அமைச்சர் வீரப்ப மொய்லி கம்பெனி விவகாரத்துரைக்கு மாற்றப்பட்டுள்ளார். சல்மான் குர்ஷித்துக்கு சட்டத்துறை கூடுதலாக வழங்கப்படுகிறது. முகுல் ராய் கப்பல் துறையையும், அஷ்வானி குமார் திட்டம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறையையும் இணை அமைச்சுக்களாக பொறுப்பேற்கின்றனர். இ.அகமது வெளியுறவுத்துறை மற்றும் மனித ஆற்றல் இணை அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

புதிதாக வெளியாகியுள்ள அமைச்சர்கள் பட்டியலில் திமுக சார்பில் சேர்க்கப்பட வேண்டிய இரண்டு அமைச்சர்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தயாநிதிமாறன் ராஜினாமா செய்த ஜவுளித்துறை கூடுதல் பொறுப்பாக ஆனந்த சர்மாவிடம் கொடுக்கப்படுகிறது. ஆனந்த் சர்மா ஏற்கனவே வர்த்தக துறையை கவனித்ததுவருகிறார்.

மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் விபரம்

1. வி கிஷோர் சந்திர தியோ - பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்

2. பேனி பிரசாத் வர்மா - ஸ்டீல்

3. தினேஷ் திரிவேதி - ரயில்வே

4. ஜெய்ராம் ரமேஷ் - ஊரக வளர்ச்சித் துறை

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு):

5. ஸ்ரீகாந்த் ஜெனா - புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், ரசாயனம்

6. ஜெயந்தி நடராஜன் - சுற்றுச்சூழல்

7. பிரணாப் சிங் கடோவர் - வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி

8. குருதாஸ் காமத் - குடிதண்ணீர் மற்றும் சுகாதாரம்

இணை அமைச்சர்கள்:

9. சுதிப் பந்தோபத்யாய - உடல்நலம் மற்றும் குடும்பநலம்

10. சரண் தாஸ் மகந்த் - விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை

11. ஜித்தேந்திர சிங் - உள்துறை

12. மிலிந்த் தியோரா - தகவல் தொடர்பு

13. ராஜீவ் ஷுக்லா - நாடாளுமன்ற விவகாரம்

அமைச்சர் பதவிகளிலிருந்து நீக்கப்படுவோர் விபரம் :

தயாநிதி மாறன்
முரளி தியோரா
பி. கே. ஹந்திக்
எம். எஸ். கில்
காந்தி லால் புரியா
சாய் பிரதாப்
அருண் எஸ். யாதவ்

மாற்றம் செய்யப்படாத துறைகள்

நிதித்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை,

No comments:

Post a Comment