Tuesday, 12 July 2011

உலகில் இப்போது அதிகம் பேசப்படும் மொழி எது?

உலகில் அதிம மக்களால் பேசப்படும் மொழிகள் எவை என புதிய புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.  7 பில்லியனை கடந்து நிற்கும் இன்றைய சனத்தொகையில் 80% வீதமான மக்கள் பேசுபவை வெறும் 83 மொழிகள் தான்.  ஆனால் 0.2% வீதமான மக்கள் 3500 மொழிகள் பேசுகிறார்கள்.  இவற்றை இறந்து வரும் மொழிகள் என கூறுகிறார்கள்.


அப்படியென்றால் மீதமுள்ள 19.2% வீத மக்கள் எந்த மொழியை பேசுகிறார்கள்?  புள்ளி விபரத்தை முழுமையாக படியுங்கள். விடை தெரியவரும்

10 வது இடம்

ஜேர்மன் மொழி - ஐரோப்பாவில் மிக அதிகமானோரால் பேசப்படும் மொழியாகவும் இது கருதப்படுகிறது. ஜேர்மனி, ஆஸ்திரியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் பேசப்படும் இம்மொழி கி.பொ 6ம் நூற்றாண்டில் இருந்து அறியப்படுகிறது. உலகில் 90 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.

9 வது இடம்

ஜப்பானிய மொழி - கிறிஸ்துக்கு பின் 8ம் நூற்றாண்டில் இருந்து பரவலாக பேசப்படுகிறது. ஜப்பான் வலய நாடுகளில் சுமார் 122 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

8 வது இடம்

ரஷ்ய மொழி - கி.பி 10 ம் நூற்றாண்டில் இருந்து பேசப்படுகிறது. 144 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.

7 வது இடம்

போர்த்துகீஸ மொழி -  உலகின் காதல் மொழி என இதனையும் அழைக்கிறார்கள். ஸ்பானிய, பிரெஞ்சு, இத்தாலிய கலவையாக இருக்கும் இம்மொழியை முன்னர் கொலிசிய சாம்ராஜ்ஜிய மக்கள் பேசிவந்தனர். இப்போது  178 மில்லியன் பேர் இம்மொழியை பேசுகிறார்கள்.

6 வது இடம்

பெங்காலி - கி.பி 1000-12000 காலப்பகுதியிலிருந்து இம்மொழி பேசப்படுகிறது.  1952ம் ஆண்டு இம்மொழியை நீக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது மற்றுமொரு வழிமுறையில் மேலும் பிரபலமடைய தொடங்கிவிட்டது. பெப்ரவரி 21ம் திகதி பெங்காலி மொழிதினம் கொண்டாடப்படுகிறது. 181 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள்.

5 வது இடம்

ஹிந்தி - இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இம்மொழி பேசப்படுகிறது. கி.பி 17ம் நூற்றாண்டிலிருந்து இம்மொழி பரவலாகத்தொடங்கிய போதும், 1954ம் ஆண்டு தான் முறையான இலக்கனம் கொண்டுவரப்பட்டது.

4 வது இடம்

அரேபிய மொழி - மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமாக பேசப்படுகிறது. புனித குர் ஆனின் மொழி எனவும் இதற்கு தனி கௌரவம் உண்டு. கி.பி 4ம் நூறாண்டிலிருந்து பரவலாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 221 மில்லியன் மக்கள் இதை பேசுகிறனர்.

3 வது இடம்

ஆங்கிலம் - பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் ஆதிக்கம் பெற்றுவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டு மக்கள் அதிகமாக பேசுகின்றனர். எனினும் அவர்களுக்கு இடையிலான மொழி உச்சரிப்புக்கள் வித்தியாசமாக உள்ளன.
கிட்டத்தட்ட 328 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

2 வது இடம்

ஸ்பானிய மொழி - ஸ்பானிய காலனித்துவத்தின் கீழ் பெரும்பாலான நாடுகளுக்கு இம்மொழி பரவலாக்கப்பட்டு விட்டது. ஸ்பெயின், மெக்ஸிகோ, கொலம்பியா பெரு போன்ற நாடுகளில் அதிக மக்களால் பேசப்படுகிறது. கி.பி 9ம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபலங்கள் பலர் தங்களது 2வது மொழியாக ஸ்பானிய மொழியை கற்று வருகின்றனர்.

329 ம்இல்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.

முதலாவது இடம்

சீன மொழி -  உலகின் 20% வீத மக்கள் சீனாவிலேயே இருக்கிறார்கள். என்பதால் சீன மொழியே தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.   ஹான் சீன இனத்தவர்கள் மற்றும் சவ் அரச குலத்தினரால் பரவலாக பேசத்தொடங்கப்பட்டது. தற்போது மாண்டரின் சீன மொழியே பேச்சுவழக்கில் பரவலாக இருக்கிறது.

1.21 பில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகிறார்கள். ஆனால் சீனாவுக்கு வெளியே, வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் மட்டுமே இம்மொழியை பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் தான் சீனா தனது சர்வதேச தொடர்புகளுக்காக ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

சரி இக்கட்டுரை எழுதப்பட்ட தமிழ் மொழிக்கு எத்தனையாவது இடம்?

சரியாக விபரம் தெரியவரவில்லை. விக்கிபீடியா கேள்வி பதில் இணையத்தளத்தின் தரவுகள் படி சுமார் 60-80 மில்லியன் மக்கள் தற்சமயம் தமிழ் மொழியை பேசிவருகிறார்கள்.

இத்தாலிய, கொரிய மொழிகளிலும் பார்க்க தமிழ் முன்னிலையில் தான் நிற்கிறது. அநேகமாக 19 வது இடம் என கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment