Tuesday, 12 July 2011

சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: உச்சநீதிமன்றம்


புதுதில்லி : அயோடின் கலக்காத சாதாரண உப்பு விற்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்ய வேண்டும் என்று சத்துணவு வளர்ச்சி கழகம் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.


இந்த வழக்கில் அயோடின் கலக்காத சாதாரண உப்பு விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் 6 மாதம் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.

உப்பில் கட்டாயமாக அயோடின் கலக்கவும் வகை செய்யும் புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், 6 மாத காலத்துக்குள் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இந்த தடை உத்தரவு தானாக செல்லாததாகி விடும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment