Tuesday, 12 July 2011

ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!

ரஷ்யாவை அண்மித்த தடாஸ்டான் நாட்டின் வொல்கா ஆற்றில் சுற்றுலா படகொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கியதில், அதில்  பயணம் செய்தோரில் 129 பேர் நீரில் முழ்கி பலியாகினர்.


மீட்பு படகில் விரையும் தடாஸ்டான் நாட்டு அதிபர்

மொஸ்கோவுக்கு கிழக்கே சுமார் 750 கி.மீ தொலைவில், இஸான் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த பல்கேரிய படகு வொல்கா ஆற்றில் பயணித்த போது சீரற்ற காலநிலை மற்றும் அதிக பயணிகளால் ஏற்பட்ட பாரம், இயந்திர கோளாறு என்பவற்றால் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவ்விபத்து நடந்த போது படகின் மேற்தட்டு தளமொன்றில் சுமார் 30 சிறுவர்கள் ஒன்றாக கூடி விளையாடியவாறு இருந்துள்ளனர். இதனால் விபத்தில் இவர்கள் அனைவரும் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

எனினும் அதிஷ்டவசமாக விபத்து நடந்த போது அருகில் சென்று கொண்டிருந்த மற்றுமொரு படகால், சுமார் 80 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

300 க்கு மேர்பட்ட ஆழ்கடல் சுழியோடிகள்  ஆற்றில் மூழ்கி இறந்தோரின் சடலங்களை தேடும் மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வெதேவ் உத்தரவிட்டுள்ளார்.  இன்று செவ்வாய்க்கிழமை தேசிய துக்க தினமாகவும் அவர் பிரகடனப்படுத்தியுள்ளார். விபத்து நடந்த படகு 55 ஆண்டு பழமை வாய்ந்தது. கடந்த 25 வருடங்களில் ரஷ்யாவில் நிகழ்ந்த மிக மோசமான கடல் விபத்தாகவும் இது பதிவாகியுள்ளது.

குறித்த படகு மூழ்கத்தொடங்கிய போது, படகிலிருந்த சிறிய ரக உயிர்காப்பு படகுகள் இரண்டில் பயணிகளை ஏற்றுவதற்கு ஓட்டுனர்கள் கடும் முயற்சி செய்த போதும், அவற்றின் எந்திரங்களுக்கான எண்ணெய், படகு முழுவதும் சிந்தி வழுக்கத்தொடங்கியதால் அம்முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

சுமார் 90 நிமிடங்கள் வரை குளிர்ந்த நீரில் பயணிகள் மூழ்கித்தவித்த பின்னரே, மீட்பு படகு அருகில் விரைந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட 36 சிறுவர்கள் ஒரே வருடத்தில் ஒரே தினத்தில் பிறந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment