Tuesday 12 July 2011

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பஸ் மறியல்

முத்துப்பேட்டையில் கடந்த 4 நாட்களாக வழக்கமாக திறந்து விடும் தண்ணீர் திறந்து விடவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஆசாத் நகர் நிஜாம் தீன் தலைமையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். 
 
 இதனை அடுத்து போலீசார் மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர்  எம்.எஸ்.கார்த்தியும் விரைந்து வந்து பொது மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இன்று மதியம் 1 மணிக்குள் தண்ணீர் திறந்து விடப்படும் என்று வாக்குறுதி கொடுத்த பிறகே அனைவரும் கலைந்து சென்றனர்.

சிந்திக்க:

கடந்த 4 நாட்களாக தண்ணீர் வராத நிலையில் எம். எஸ்.கார்த்தியின் பகுதியான காளியம்மன் கோயில் மக்களுக்கு மட்டும் வண்டி தண்ணீர் இலவசமாக சப்ளை செய்யப்பட்டது. ஆனால் ஆசாத்நகர், ரஹ்மத் நகர், தெற்குத்தெரு போன்ற பகுதிகளில் வண்டி தண்ணீர் காசுக்கு கொடுக்க கூட வண்டி அனுப்பவில்லை என்பது இப்பகுதி மக்களின் குமுறல்.
 
நன்றி : MPT Force

No comments:

Post a Comment