Wednesday 13 July 2011

கென்யாவில் வறட்சி அகதிகள் முகாமில் தவிக்கும் மக்கள்

கென்யாவில் உள்ள தாதாப்பில் லட்சக்கணக்கான அகதிகள் உள்ள முகாமுக்கு நேற்று தண்ணீர் லாறி வந்தது. இந்த தண்ணீர் லாறியை பார்த்ததும் முகாமில் பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு புன்னகை எட்டிபார்த்தது.


சிறு குழந்தைகள் கூட தண்ணீரை பார்த்ததும் பெரிய புதையலை கண்டது போல அணி வகுத்து நின்றன. சிறுமியின் முதுகில் இருந்த ஒரு வயது குழந்தைக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு புரிந்து இருக்கிறது.

கென்யாவில் உலகில் அதிக அளவில் அகதிகள் தங்கும் முகாமாக தாதாப் பகுதி அமைந்து உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்போது வறட்சி ஏற்பட்டு உள்ளது.

இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் அகதிகளாக முகாமில் குவிந்து உள்ளனர். புதிய அகதிகளாக வருபவர்கள் நிவாரண உதவிகளை ஏற்கனவே உள்ளவர்களிடம் பரிதாபமாக கேட்டு பெறுவதை பார்க்க முடிந்தது.

இந்த பகுதியில் உள்ளவர்கள் உணவுக்கு பரிதவிப்பதை போல தண்ணீர் குடிக்க பல மைல் தூரம் தினமும் நடக்க வேண்டி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அகதிகள் முகாம் அமைக்கப்பட்டது.

முகாம் துவங்கிய போது நல்ல வசதிகளுடன் இருந்த முகாம் தற்போது லட்சக்கணக்கில் அகதிகள் வருகையால் திணறி உள்ளது. கிடைக்கும் தார்பாயின் மூலம் சிறிய கூடாரங்கள் அமைத்து மக்கள் அதில் தங்கி இருக்கின்றனர்.

No comments:

Post a Comment