தகவல் அறியும் உரிமை சட்டம் வந்ததிலிருந்து பல்வேறு தகவல்கள் பொதுமக்கள் பெற முடிந்தது. கேட்கும் தகவல்களை தர மறுக்கும் துறை சார்ந்தவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் முறையால் பொதுமக்களுக்கு பல மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளியே வந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சொத்துக் கணக்குகளை கேட்டு பெறுவது போல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்குகளை தர வேண்டும் என்று கேட்டு மாதவன் என்கிற சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதன் மீதான தீர்ப்பு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பி.முருகேசன், கே.கே.ஸ்ரீதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தனது தீர்ப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்து விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வெளியிட வேண்டும்.
அதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விதிவிலக்கல்ல. அவர்களும் மக்கள் ஊழியர்களே என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்துக்களை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment