மும்பை, ஜூலை 12:
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில்
அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பதில் அளிக்கலாம். இதை மும்பை
நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உறுதி
செய்துள்ளது.
யுபிஎஸ்சி நடத்தும் தேர்வில் பங்கேற்போருக்கு இந்த உறுதி மிகச் சிறந்த மகிழ்ச்சியை அளிக்கும்.இது
தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் சித்தரஞ்சன் குமார் என்ற ஐஏஎஸ்
போட்டித் தேர்வு எழுதிய இளைஞர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில்
தான் 2008-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வை ஆங்கிலத்தில் எழுதியதாகவும்,
நேர்முகத் தேர்வில் ஹிந்தியில் பதில் அளிக்க வாய்ப்பு கேட்டபோது, பிரதான
தேர்வை ஆங்கிலத்தில் எழுதினால் ஆங்கிலத்தில்தான் நேர்முகத் தேர்வை
எதிர்கொள்ள வேண்டும் என கூறப்பட்டது. தேர்வு எழுதுவோரின் விருப்பத்துக்கு
ஏற்ற மொழியில் நேர்காணலின்போது பதில் அளிக்க வலியுறுத்த வேண்டும் என
மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய நடைமுறை அமல்படுத்தப்பட்டால்
நேர்முகத் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் தங்களது தாய்மொழியில் பதில்
அளித்து அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். இதன் மூலம் இத்தகைய தேர்வுகளில்
தேர்ச்சிபெறும் கிராமப்புற மாணவர்களின் விகிதமும் கணிசமாக அதிகரிக்கும்
என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்போது பின்பற்றப்படும்
நடைமுறையானது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பாக யுபிஎஸ்சி நீதிமன்றத்தில்
பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது. அதில், இது தொடர்பாக
அமைக்கப்பட்ட நிபுணர் குழு தனது பரிந்துரையில் தேர்வு எழுதுவோரின்
விருப்பத்துக்கு ஏற்ப நேர்காணலில் பதில் அளிக்கலாம் என
குறிப்பிட்டிருந்தது.
இந்த பரிந்துரைகளை யுபிஎஸ்சி ஏற்றுக் கொண்டு அரசுக்கு
அனுப்பியுள்ளது. அரசின் பதில் கிடைத்தபிறகு உரிய மாற்றங்களுடன் இம்முறை
அமல்படுத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment