Wednesday 13 July 2011

சமச்சீர் கல்வி திட்டம் : தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சமச்சீர் கல்வித்திட்டம் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, சமச்சீர் கல்வி திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எடுத்த முயற்சிக்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றில் மேல் முறையீடு செய்தது. 1-6 வகுப்புக்கள் வரை சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். புதிய நிபுணர் குழு ஒன்றை நியமித்து, ஏனைய வகுப்புக்களுக்கு எவ்வாறானதொரு கல்வி திட்டம் தேவைப்படுகிறது என அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன் படி தமிழக அர்சௌ நியமித்த 9 பேர் கொண்ட குழுவினர் தமது அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இது தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நடப்பு சமச்சீர் கல்வியையே தொடர்ந்தது அமல்படுத்த கோரி மனு தாக்கல் செய்திருந்த ஓய்வு பெற்ற ஆசிரியை மனோன்மணி என்பவரின் சார்பி வழக்கறிஞரும் நேற்று ஆஜராகி தனது தரப்பு நியாயத்தை தெரிவித்தார்.

இரு தரப்பு வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி, சமச்சீர் கல்வி திட்ட வழக்கில் இத்துடன், வாத பிரதி வாதங்கள் யாவும் முடிவடைவதாகவும், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

No comments:

Post a Comment