Thursday 28 July 2011

கர்நாடகா சுரங்க ஊழல் : ரெட்டி சகோதரர்களும் ராஜினாமா?

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பாவைத் தொடர்ந்து ரெட்டி சகோதரர்களும் அமைச்சரவையில் இருந்து விலகலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

கர்நாடகவில் சுரங்க ஊழல் தொடர்பான லோக் ஆயுக்த விசரணை அறிக்கையில் முதலமைச்சர் எடியூரப்பாவின் பெயர் இடம்பெற்றதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.


இதனையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு எடியூரப்பாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், லோக் ஆயுக்த விசரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெல்லாரி சகோதரர்களும் அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதால் அவர்களும் ராஜினாமா செய்யும் நிர்ப்பந்தம் அதிகரித்து வருவதால், அவர்களும் பதவி விலகலாம் என்று கூறப்படுகிறது.
சுற்றுலா, கலாசாரம் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சித் துறை அமைச்சர் ஜி.ஜனார்த்தன ரெட்டி, அவருடைய சகோதரர் வருவாய்த் துறை அமைச்சர் ஜி.கருணாகர ரெட்டி, அவருக்கு மிக நெருக்கமான சுகாதாரத் துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு ஆகியோரும் லோக் ஆயுக்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment