லிபிய போராட்டக்காரர்கள் ஒரே அரசின் அங்கீகாரம் பெற்றவர்கள் என பிரிட்டன்
கூறியுள்ளது. பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு லிபியா கடாபி நிர்வாகம்
கண்டனம் தெரிவித்துள்ளது.
கடாபியின் நிர்வாகத்தில் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள காலித் காலிம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்ற செயல். பிரிட்டன் முடிவை நீதிமன்றம் மூலம் மாற்றுவேன்" என்றார்.
பிரிட்டனில் கடாபியின் 8 தூதர்கள் வெளியேறுவதற்கு பிரிட்டன் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து லிபியாவின் கடாபி நிர்வாகம் கடும் எரிச்சல் அடைந்துள்ளது.
லிபியாவில் போராட்டக்காரர்களின் தலைமையகமாக தேசிய மாற்றக் கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான மகமூத் அல் நகுவை லண்டனில் லிபியாவின் புதிய தூதராக நியமித்து உள்ளது.
கடாபி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 33 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருக்க வேண்டி இருந்தது என மகமூத் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment