Thursday, 28 July 2011

ஆளுக்கொரு நீதி அதுதான் இன்றைய உலக நியதி !!

பலஸ்தீன் என்ற சுதந்திர நாடு உருவாவதற்கு அமெரிக்கா ஐ.நா. பொதுச் சபையில் ஆதரவு அளிக்கப்போவதில்லை என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதேவேளை  மேற்குலகின் ஆயுதமான கிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஒரு சனிக்கிழமை அன்று சூடானில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட  தெற்கு சூடான் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் ஆசீர்வாதத்துடன் “வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மகிழ்ச்சியானதும்” என பொதுச் சபையின் தலைவர் யோசப் டீஸ் வழிமொழிய வாக்கெடுப்பு எவ்வித எதிர்ப்பும் இன்றி வெற்றிபெற “நல்வரவு, நாடுகளின் கூட்டமைப்புக்கு தெற்கு சூடானை வரவேற்கிறோம்,” என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் வாழ்த்துரைக்க ஐநாவின் 193வது உறுப்பு நாடாக அங்கீகாரம் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் பாவம்  பலஸ்தீன் மக்கள் பலஸ்தீனர்களின் நாடு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பிசாசுகளின் வன்புணர்சிக்கு உட்டபட்ட திகதி தொடக்கம் இன்றுவரை அரை நூற்றாண்டுக்கு அதிகமான காலமாக பலஸ்தீனர்கள் தமது சொந்த மண்ணில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வெறியர்களினால் அடக்கு முறையின் கீழ் தினமும் வதை பெறுகின்றார்கள்.

குழந்தைகளுடன், உறவுகளுடன்  கூடியிருக்கும் இல்லங்களை இஸ்ரேலிய பேய்கள்  வந்து இடித்து தகர்க்க இவர்கள் இழப்பதும், தவிப்பதும், உம்மா பாண் வான்கிவருகின்றேன் என்று கடை வீதிக்கு வரும் இளசுகள் கொல்லப்படுவதும், வீட்டு அறைகளில் விளையாடும் பிஞ்சு முக மழலைகள் உடல் சிதறி  இறப்பதும், கணவனுடன் படுத்துறங்கும் மனைவியரை வீட்டின் பின்புறம் உடைத்து நுழையும் மிருகங்கள் வதை முகாம்களுக்கு  இழுத்து செல்வதும், முகாம்களில் கேட்பார் எவரும் இன்றி இடிந்து, சிதைந்து, இழந்து உன், என் சகோதரிகள் அரை நூற்றாண்டுகளாக  எம் உலக உறவுகள் காப்பாற்றும் என்று காத்திருக்க.

பலஸ்தீன நிர்வாகம் வரும்   செப்டெம்பர் மாதம்  ஐ.நா. சபையில் பலஸ்தீனை சுதந்திர தனி நாடாக அங்கீகாரம் மற்றும் அங்கத்துவம் கோர தீர்மானித்துள்ளனர் என்ற செய்தியும், ஐ.நா.வுக்கு வெளியில் 120 நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. அந்த நாடுகள ஐ.நா. பொது சபையில் பலஸ்தீனை 1967ஆம் ஆண்டு எல்லையை தற்போதைய பலஸ்தீன நாட்டின் எல்லைகளாக கொண்டு சுதந்திர நாடக அங்கீகரிக்க தயாராக உள்ளது  என்று பலஸ்தீனர்கள் சுத்திர கனவில் இருக்க.

ரத்து அதிகாரம் என்ற அமெரிக்க ஏகாதிபத்திய ஆயுதம் கொண்டு மீண்டும்  பலஸ்தீன சுதந்திரத்தின் தலையில் கோடரியால் கொத்த போவதாக உறுமுகின்றது. ரத்து அதிகாரம் Vito power கொண்டுள்ள அமெரிக்கா பாதுகாப்பு சபை பிரதிநிதி ரொஸ்மெரி டிகாலோ “இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக பலஸ்தீன் தனி நாடொன்றை உருவாக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கப் போவதில்லை. இவ்வாறான பக்கச்சார்பான திட்டத்திற்கு செப்டெம்பரில் மட்டுமல்ல ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனில் மட்டுமல்ல உலகின் பல சிறைகளில் நூற்றுகணக்கான பெண்கள், சித்தரவதைகளை தினமும் அனுபவித்து விடுதலைக்காக காத்திருகின்றார்கள். யார் அவர்களுக்கு உதவுவார் ? துவா மட்டும் தான் எங்கள் ஆயுதம் என்று கூறும் பல துடிப்பான , ஆளுமையுள்ள இளம் ஆண்கள் உண்மையில் துவாக் கூட கேட்காமல் கதை விடுகின்றார்கள் என்பதுதான் உண்மை FACEBOOK, TWITTER ஆகிய சமூக வலைதளங்களில் அவர்களின் கருத்துகளும், செயல்களும் இந்த சந்தேகத்தை எழுப்ப காரணமாக இருக்கிறது. 

ஒவ்வொருவரும் இந்த உலகில், விடுதலை ,சுதந்திரம், சமாதனம் , சகவாழ்வு உதயமாக உழைக்கவேண்டும். இஸ்லாம் என்ற கோபுரத்தை கட்ட ஒவ்வொருவரும் ஒரு கல்லையாவது சுந்தாகவேண்டும். இது ஒரு கடமையும் காலத்தின் கட்டாயமும். ஆளுக்கொரு நீதி என்ற இன்றைய உலக அநீதியை ஒழிந்து அனைவருக்கும் ஒரு நீதி என்ற நீதிகளின் நீதியை நிலைநாட்டவேண்டும்.

No comments:

Post a Comment