Friday, 2 September 2011

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே மோதல்: பெண் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் இடையே இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் பெண் ஒருவர் பலியானார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி மிக விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. களிமண்ணால் செய்யப்பட்ட சிறு விநாயகர்சிலைகள், அனைத்துசாலைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டு, 20 லிருந்து 250 ரூபாய் வரை விற்கப்பட்டன.

காஞ்சிபுரம் காந்தி சாலை, ராஜாஜி மார்க்கெட், பஸ் நிலையம், பூக்கடைசத்திரம், பெரிய காஞ்சிபுரம், ஜவகர்லால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலங்களும் ஆங்காங்கே நடந்தது.

காஞ்சிபுரம் பாரதி நகர் பகுதியில் நடந்த ஊர்வலத்தில் இருத்தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் மாறிமாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலுக்கு இடையே வையாவூர் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி பவானி (40) என்பவர், சில மர்மநபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறி்த்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment