Friday 2 September 2011

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் அரசு சார்பில் அளிக்கப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.   

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   


சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் சீóர்மரபினர், இதர இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.   

வருகிற 2012-ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்காக, நடத்தப்படும் பயிற்சியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு இப் பயிற்சி மையத்தால் நடத்தப்பட உள்ளது.   

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் தகுதியுடைய இளைஞர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் கிடைக்கும்.   

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற செப். மாதம் 29-ம் தேதி மாலை 5.45 மணி வரை அளிக்கலாம். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.     அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் கல்வித் தகுதி, வயது, இருப்பிட சான்றிதழ்களுடன் விண்ணப்பம் பெற அணுக வேண்டும்.   

ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், 31.7.1977-க்கு பின்னரும் 31.7.1991-க்கு முன்னரும் பிறந்தவராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்பட்ட வகுப்பினர்கள், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்ளிட்டோர் 31.7.1979-க்கு பின்னரும், 31.7.1991-க்கு முன்னர் பிறந்தவகளாகவும், இதர வகுப்பினர் 31.7.1982-க்கு பின்னரும், 31.7.1991-க்கு முன்னரும் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.    

தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment