Friday 2 September 2011

குரூப் 2 தேர்வில் முறைகேடு நடக்கவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

மதுரை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வில் 600 மாணவர்கள் 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இத்தேர்வில் பங்கு கொண்ட யாரும் 300க்கு 300 மதிப்பெண் பெறவில்லை என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.

கடந்த ஜூலை மாதம் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு (குரூப் 2) உள்ளடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்விற்குரிய விடைகள் வெளியானதாக வந்த செய்தி குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களிடம் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.

இதே போன்று சேலம் மாவட்டத்தில் தேர்விற்குரிய விடைகள் வெளியானதாக வந்த செய்தி குறித்து பெறப்பட்ட புகார்களைப் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கான தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை.

குரூப்-1 மற்றும் குரூப்-2 க்கான நேர்முகத் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு நியமன உத்தரவு வழங்கப்படுவதாக கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது. இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment