Friday, 2 September 2011

பாபரி மஸ்ஜித் வழக்கு: பாப்புலர் ஃப்ரண்ட் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர்நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் சம்பந்தமான தீர்ப்பை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் அளித்துள்ளது.

பல ஆண்டுகாலமாக‌ நிலுவையில் இருந்த பாபரி மஸ்ஜித் இராம ஜென்ம பூமி விவகாரத்தில் கடந்த வருடம் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வேடிக்கையான தீர்ப்பை வழங்கியது.

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை மூன்று பங்காக பிரித்து இந்துக்களுக்கு 2 பங்கு முஸ்லிம்களுக்கு 1 பங்கு என பிரித்துக் கொடுத்தது. இவ்வழக்கு தற்போது பட்டியலில் உள்ளது சிவில் எண்  13596 படி நிலுவையில் இருந்து வருகிறது. 
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வழக்கறிஞர் என்.எல் கணபதி, ஆர்.சி.குப்ரேலே, மற்றும் மூத்த வழக்கறிஞர் ருபீந்தர் சூரி ஆகியோரின் மூலமாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மூன்று வழக்கறிஞர்களும் விசாரணையின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆஜராவார்கள்.

பாபரி மஸ்ஜித் இருந்த 2.7 ஏக்கர் நிலம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது எனவும் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாம இராமர் பிறந்த இடம் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்ததாக கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


கே.எம். ஷரீஃப்
தேசிய பொதுச்செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாபரி மஸ்ஜிதை விடுவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை! இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment