புதுடெல்லி:மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச்செய்யப்பட்ட ஒன்பது முஸ்லிம் இளைஞர்களை அஸிமானாந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பின்னரும் சிறையிலடைத்திருப்பது குற்றகரமானது என தேசிய சிறுபான்மை கமிஷன் மத்திய அரசுக்கு புகார் அளித்துள்ளது.
2006-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்பது நிரூபணமான பின்னரும் முஸ்லிம்
இளைஞர்களின் சிறைக்கொடுமை தொடருவதை அங்கீகரிக்க இயலாது என அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில் கமிஷனின் தலைவர் வஜ்ஹத் ஹபீபுல்லாஹ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு மலேகான் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு தான் உள்ளிட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகள்தாம் திட்டமிட்டு செயல்படுத்தினோம் என்பதை நீதிமன்றத்தின் முன்னர் அஸிமானந்தா குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து மலேகான் உள்ளிட்ட வழக்குகளை விசாரணை நடத்தும் பொறுப்பு என்.ஐ.ஏ விடம் ஒப்படைக்கப்பட்டது என்பதையும் ஹபீபில்லாஹ் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்துறை-சட்ட அமைச்சகங்களுக்கு சிறுபான்மைகமிஷன் புகார் கடிதத்தை அளித்துள்ளது.இப்பிரச்சனையில் அவசரமாக தலையிடவேண்டும் எனவும், முஸ்லிம் இளைஞர்களுக்கு ஜாமீன் வழங்குவது சிறிதும் தாமதிக்கக்கூடாது எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச்செய்யப்பட்ட 9 முஸ்லிம் இளைஞர்களையும் போலிக்ராஃப் சோதனைக்கு உட்படுத்தியது.இதிலும் அவர்கள் நிரபராதிகள் என்பது
நிரூபணமானது.ஐந்து வருடங்களாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களை சிறையில்
அடைத்திருப்பது முஸ்லிம் சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவ்விவகாரத்தில் என்.ஐ.ஏ தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவேண்டும். ஒன்பது முஸ்லிம் இளைஞர்களுக்கு உடனடியாக நற்சான்றிதழ் வழங்க தடைகள் இருந்தாலும், ஜாமீன் வழங்குவதை எதிர்க்காமலிருக்க வேண்டும்.
அடுத்த வாரம் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.தொழில்நுட்ப காரணங்களால் இவர்களுடைய சிறை வாழ்க்கை காலவரையன்றி தொடருவதாக அரசு கூறுகிறது.
அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் நகல்கிடைத்த பொழுதிலும் அதன் பிறகு ஒன்பது முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலைச்செய்வதில் நீதிமன்றத்திற்கு சில வரம்புகள் இருப்பதாக மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை கூறுகிறது.
முன்னர் சி.பி.ஐ ஒன்பது முஸ்லிம் இளைஞர்களுக்கும் வழக்கில் தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைதாக்கல்செய்தது. உடனடியாக இவர்கள் மீது தாக்கல் செய்தகுற்றப்பத்திரிகையை
வாபஸ்பெறுவது தொழில்நுட்பரீதியாக சிரமமானது என சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங்சிறுபான்மை கமிஷன் முன்பாக ஆஜராகி தெரிவித்திருந்தார்.
அதேவேளையில், இவர்களது ஜாமீன் மனுவை எதிர்க்கமாட்டோம் என சி.பி.ஐ சிறுபான்மை கமிஷனுக்கு வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், மஹராஷ்ட்ரா மாநில அமைப்புரீதியான சட்டவிரோதகுற்றத்தடுப்புசட்ட நீதிமன்றம் அப்பாவியான முஸ்லிம் இளைஞர்களுக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
No comments:
Post a Comment