Wednesday, 2 November 2011

ஆட்சியில் பங்கேற்கவே நாம் தயாராகிறோம்


  • மு
தமிழில் - ஏ.டபிள்யூ.எம்.பாஸிர்
ஷெய்க் றாஷித் அல் கன்னூஷிதூனீஸிய இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் சர்வதேச உயர் சபையின் உறுப்பினர்சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர். அவருடன் தூனீசியாவின் அஷ்-ஷுரூக் பத்திரிகை மேற்கொண்ட நேர்காணலின் சில பகுதிகளை மீள்பார்வை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
 
இன்றைய தூனீசியாவின் அரசியல் நிலைமை எப்படி இருக்கின்றதுசரியான தருணத்தில் தேர்தல் நடைபெறுகிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா?
ஆரம்பத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தேசிய பேரவையொன்றை நோக்கிச் சேல்வதைத் தவிரவேறு மாற்றீடுகள் இல்லை. இல்லாவிட்டால் நாட்டுக்கோ மக்களுக்கோ பயன்தராத வெறும் குழப்பங்களே மிஞ்சும். தற்போதைய நிச்சயமற்ற நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒரே தெரிவு தேசியப் பேரவையொன்றை ஏற்படுத்துவதே.
தேசியப் பேரவைக்கான தேர்தல் பெறுபேறுகளில் இயக்கம் எந்தளவில் திருப்திப்படும்?
எதிர்வரும் ஒக்டோபர் 23ல் நடைபெறவுள்ள தேசியப் பேரவைக்கான தேர்தல் நவீன தூனீசியாவின் வரலாற்றில் நிகழப் போகும் அனைத்துத் தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்ட நம்பத்தகுந்த முதற் தேர்தலாக இருக்கும்.
நீங்கள் எதிர்க்கட்சித் தரப்பல்லாது அரசாங்கத் தரப்பாக அல்லது அதன் பங்காளியாக உங்களைக் காண்கிறீர்களா?
ஆம்மக்களின் சேல்வாக்கைப் பெற்றிருப்பதால் ஆட்சியில் பங்கு பற்றவே நாம் தயாராகிறோம். அவர்களின் நம்பிக்கையை நாம் பாழாக்க மாட்டோம். தற்போது நாம் பொறுப்புக்களைச் சுமக்கும் சக்திபெற்ற அணி என்ற வகையில் நிழல் அரசாக கருதப்படுகிறோம். அதேவேளை ஏனையவர்களுடன் இணைந்து இயங்குவது பற்றியும் ஆராந்து வருகிறோம். எதிர்வரும் ஐந்து வருடங்களில் தேசிய கூட்டணி அரசாங்கம் என்பதற்கப்பால் போகமுடியாத ஒரு நிலை இருக்கிறது.
நஹ்ழா பெரும்பான்மையைப் பெற்றாலும் (தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இது மிகவும் சிரமமானது) நாம் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கவே முயற்சிக்கிறோம். நாடு இருக்கும் சூழ்நிலையில் ஒரு கட்சியால் அதனை சுமக்க முடியாது. எமது இயக்கம் பெரும் பான்மையான மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறது என்று நாம் நிர்ணயித்திருக்கிறோம். அப்படிப் பெரும்பான்மையைப் பெற்றாலும் தேர்தல் சட்டப்படி எங்களால் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற முடியாது.
ஏனையவர்களுடன் உரையாடலை ஆரம்பிக்கப் போவதாக கூறினீர்கள். அவர்கள் யார்?
லிபரல்இடதுசாரிதேசியவாதக் கட்சிகள் அனைத்துடனும் நாம் மனம் திறந்து உரையாடுவோம். பின் அலியின் எதிர்க் கட்சிகளுடன்கூட எமக்குத் தொடர்பிருக்கிறது. அவர்களில் சிலருடன் நாம் இணைந்து பணியாற்றுகிறோம். அத்தொடர்புகள் தொடர்ந்தும் பேணப்படும்.
தூனீசிய சமூகப் பிரிவுகள் மத்தியில் உங்கள் இயக்கம் பற்றியும் அதன் எதிர்கால நிகழ்ச்சி நிரல் பற்றியும் பீதி நிலவுகிறது என்று நினைக்கிறீர்களாகுறிப்பாக சமூக நிலைசுதந்திரம்பெண் மற்றும் குடும்ப உரிமைகள் தொடர்பில். அதேவேளை அப்பிரிவுகள் மத்தியிலும் ஏனைய அரசியல் தரப்புகள் மத்தியிலும் புரிந்துணர்வை அதிகரிக்கும் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்களா?
சிலர் பின் அலி பயன்படுத்திய இஸ்லாமியப் பயப்பிராந்தி (Islam Phobia) யை பயன்படுத்த நினைக்கின்றனர். இஸ்லாமியவாதிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளின் தொடர்புகளை சம்பாதித்துத்தரும் ஒரு தொழிலாகக் கருதப்பட்டது. இஸ்லாம் குறித்து பயப்பிராந்தியை  ஏற்படுத்தும் சில தொழில் வல்லுனர்கள் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எனது கணிப்பீட்டில் நஹ்ழா பற்றி அச்சம் கொள் பவர்கள் இருவகையினரே.
ஒன்றுஇஸ்லாம் குறித்தும்நஹ்ழா பற்றியும் அறியாதவர்கள். இவர்கள் நஹ்ழாபயங்கரவாதம்,இஸ்லாமிய இயக்கங்கள் பற்றி பின் அலி விதைத்த பொப்பிரச் சாரங்களை அவற்றின் ஆவணங்களையோ வெளியீடுகளையோ வாசிக்காமல் நம்பியவர்கள். உதாரணத்திற்கு ஒன்றைக் கூறுகிறேன்முஹம்மத் அத்தாலிபீ என்னைப் பற்றி மிக மோசமாக சித்தரித்து போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவரிடம் கனூஷியின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீரா எனக் கேட்கப்பட்டபோது தான் அவருடைய எழுத்துக்கள் எதனையும் வாசிக்கவில்லை என்றார். நான் இப்படிப்பட்டவர்களை சமத்துவமாக நடக்குமாறும்எல்லா அறிஞர்களை கண்ணியப்படுத்து மாறும் வேண்டிக் கொள்கிறேன்.
இரண்டாவதுஇஸ்லாமியப் பயப்பிராந்தியைத் (Islam Phobia) தொழிலாகக் கொண்டவர்கள். இவர்களின் தொழில் நஹ்ழாவை பொப்படுத்துவதும்தாக்கிப் பேசுவதும்குற்றம் சாட்டுவதுமே. இவர்களுக்கு பின்வரும் அல்குர் ஆன் வசனம் பொருந்தும். பொய்யாக்குவதையே நீங்கள் தொழிலாக கொள்கின்றீர்களா? (அல்-வாகிஆ: 82) இவர்களுக்கு மருந்தில்லை.
நஹ்ழாவின் திட்டத்தில் அஞ்சுவதற்கு எதுவுமில்லை. நஹ்ழா 20 வருடங்களுக்கு அதிகமாக தூனீசிய மக்களிடையே சமத்துவ உரிமைகளுக்கு முழுமையான கண்ணியத்தை உறுதிப்படுத்தி வந்திருப்பதோடு ஜனநாயக ஒழுங் கில் பொதுச் சுதந்திரத்தைப் பாதுகாத்தும் வந்திருக்கிறது. நஹ்ழா இஸ்லாமிய கலாசாரத்திற்குரிய ஜனநாயகக் கொள்கையை ஏற்படுத்துவதில் முன்னணியில் இருந்திருக்கிறது. அதேவேளை உலகளாவிய இஸ்லாமிய சிந்தனையிலும் கனிசமாக பங்களித்திருக்கிறது. ஆனால்பலரும் பயன்பெற்ற இச்சிந்தனை தூனீசிய சமூகத்திற்கு தடுக்கப்பட்டிருக்கிறது. இவை கடந்த காலங்கள். இன்று பல்வேறு நூற்களும்இலக்கியங்களும் காணப்படுகின்றன. முடிந்தளவு சிரமமின்றி அவற்றை அனைவரும் வாசித்து விளங்க முடியுமாக இருக்கின்றது.
இங்கு கவலைக்குரிய விடயம் பெண்களில் சிலர் இன்னும் பின் அலி விதைத்த நச்சுக் கருத்துக்களை உள்வாங்கி இருப்பதுதான். தமது தொழில்தமது கல்விதொழில் வாய்ப்புரிமை பற்றி இவர்கள் அஞ்சுகிறார்கள். இவை வெறும் ஊகங்களே. அவர்களுக்கு நான் சோல்வது இஸ்லாமிய வாதிகளின் மனைவிமார்களைபிள்ளைகளைசகோதரிகளை கொஞ்சம் பாருங்கள். அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் தொழில் புரிகிறார்கள்படிக்கிறார்கள்பயணம் சேய்கிறார்கள். அரசியலிலும் சிவில் பணியிலும் பங்கு கொள்கிறார்கள். தமக்கு நெருக்கமான பெண்களுக்கு அனுமதித்த விடயங்களை ஏனையவர்களுக்கு எப்படி தடுக்க முடியும்?.
புரட்சியின் இலக்குகளை நிறைவேற்ற ஸீரியஸாக உழைக்கும் அனைத்து தூனீசிய மக்களையும் நஹ்ழா தனது அணியில் வரவேற்கிறது. அவர்கள் ஆண்பெண்ஹிஜாப் அணிந்தவர்கள்,அணியாதவர்கள்தொழுபவர்கள்அதில் குறைவிடுபவர்கள் என்று யாராகவும் இருக்கலாம். காலம் வரையறுக்கப்பட்ட எல்லையுடன் நிற்பதில்லை. நாம் மார்க்க பக்தியின் அளவை வைத்து மக்களை நோக்கு வதில்லை. பக்தி மாறக் கூடிய தொரு அம்சம். அது நிலையானதல்ல. ஈமான் கூடும்குறையும் என்பதை அனைத்து அஹ்லுஸ் ஸுன்னாக்களும் ஏற்கின்றனர். இங்கு முக்கியம் மனிதன் தன்னோடும்பிறரோடும் ஸீரியஸாகஉண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே.
தூனீசியாவின் ஏனைய கட்சிகள்இஸ்லாமிய அமைப்புக்களுடனான உங்களது தொடர்புயாதுகுறிப்பாக ஹிஸ்புத் தஹ்ரீர் மற்றும் ஸலபி அமைப்புக்களுடனான தொடர்புகள் என்ன?
இவர்கள் எமது சகோதரர்களே. அவர்களுடன் நாம் உரையாடுகிறோம். தொடர்பு வைத்திருக்கிறோம். உடன்பாடான விடயங்களில் ஒத்துழைக்கிறோம். முரண்பாடான அம்சங்களில் பரஸ்பரம் விட்டுக் கொடுக்கிறோம்.
தேசிய இணக்கப்பாடு தொடர்பில் தற்போது அழைப்பு விடுப்பவர்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்னசித்திரவதைசிறைவைப்புநாடு கடத்தல்கொலை என்று அட்டூழியங்கள் புரிந்த கடந்தகால அநியாயக்காரர்கள் குறித்த உங்கள் கருத்து என்ன?
இவை அசத்தியம் கலக்காத சத்தியமான வார்த்தைகள். நாம் நாட்டுக்கும் சமூகத்திற்குமிடையிலே நாட்டுக்கும் மார்க்கத்திற்குமிடையிலேதேசத்திற்கும் அதன் வரலாற்றுக்கும் அதனைச் சூழ உள்ள அறபு இஸ்லாமிய பிரதேசங்களுக்குமிடையிலான இணக்கப்பாட்டிற்காக நீண்ட காலமாகவே அழைப்பு விடுத்து வந்திருக்கிறோம்.
தற்போதைய இணக்கப்பாட்டின் நோக்கம் முன்னைய ஆட்சியில் நடந்த குற்றங்களைத் தவிர்ப்பதும்இருட்டடிப்பு சேய்வதுமாக இருப்பின் (எதுவுமே முன்பு நடக்காததுபோல்) அது நீதியற்றது. எனவே இணக்கப்பாடு எனும்போது தெளிவும் கடந்த காலம் குறித்த சுயவிசாரணையும் உள்ளடக்கப்பட வேண்டும். உரியவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதை அது அங்கீகரிக்க வேண்டும். அதனை மீளவும் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
ஒரு தூனீசிய பிரஜை கடந்த காலப் பக்கங்களை அழிப்பதை ஏற்க முடியும். ஆனால்அவசியம் அவற்றுக்கான பதிவு வேண்டும். தென்னாபிரிக்காவிலும்சிலியிலும் இன்னும் பல நாடுகளிலும் நடந்தது போன்று உரிமைகள் உரியவர்களுக்கு வழங்குவதை அங்கீகரித்த பின்பே இணக்கப்பாடு சாத்தியப்பட்டது.
பழி வாங்குவதற்குப் பகரமாக இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும். குற்றவாளிகள் தங்களால் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்பைக் கேட்க முடியும். அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் முடியும். ஆனால்நஷ்டஈடு வழங்க முடியாத விடயங்கள் இருக்கின்றனவே. கணவனை இழந்த மனைவிக்கும்பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கும் எப்படி நஷ்டஈடு கொடுப்பது?சித்திரவதையினாலும்புறக்கணிப்பினாலும் பாதிப்புற்று நோய்களுக்கும் இயலாமைக்கும் உட்பட்ட ஜீவன்களுக்கு யார் இழப்பீடு சேய்வதுநாம் எப்படி ஈடுசேயப் போகிறோம்?
பொருளாதார சமூக அரசியல் தொடர்பான திட்டங்கள் பற்றி நீங்கள் நிறையப் பேசியிருக்கிறீர்கள். எனினும் அவை பற்றிய தெளிவான விளக்கங்கள் வெளியிடப்படவில்லையே?
இயக்கத்தின் திட்டம் குறித்த தெளிவானமுழுமையான தகவல்கள் மிக விரைவில் வெளியிடப்படும். அவற்றை அமைப்பின் புத்திஜீவிகளும்அனுபவமிக்க துறைசார் அறிஞர்களும் தயாரித்திருக்கிறார்கள். அமைப்பின் உயர் சபை அங்கீகரித்து அதன் இறுதி வடிவத்தை வரைவதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கிறது. மிக விரைவில் அவற்றைக்காண முடியும்.
நீங்கள் நஹ்ழாவிலோ தூனீசிய அரசாங்கத்திலோ தலைமைத்துவம் வகிப்பதில்லை என்று அறிவித்திருந்தீர்கள். அத்தீர்மானத்திற்கான நியாயங்கள் என்னதொடர்ந்தும் அத்தீர்மானத்திலேயே இருக்கிறீர்களா?
அது தொடர்பான என் கருத்தை நான் மாற்றப் போவதில்லை. நான் போதுமானளவு தலைமைத்துவப் பயிற்சி நெறிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அங்கு தலைமைத்துவத்திற்கு தகுதியான புதிய தலைமுறையொன்று உருவாகியுள்ளது. நிலைமைகள் எப்படி இருப்பினும் நான் எனது சகோதரர்களது பாதுகாப்பில்தான் இருப்பேன். நான் இப்பதவியை விட்டுவிட்டால் அதில் நான் நஹ்ழாவை விட்டுவிடுவேன் எனும் அர்த்தம் அல்ல.
எதிர்காலத்தில் எனது பங்களிப்பு தூனீசியா முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கம் என்ற வகையிலேயே இருக்கும். முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் துணைப் பொதுச்சேயலாளர் என்ற வகையில் முழு உம்மத்திற்காக இயங்குவேன். டியூனிஸியா அகன்ற இந்த உம்மத்தின் ஒரு சிறிய அங்கம்.
கடைசியாக ஒரு கேள்விஉங்களது எதிரிகள் உங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று நிதி விவகாரம்நிதியை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள்?
நாட்டிலுள்ள மிகப் பெரிய இயக்கம் ஒன்றிடம் தனது நிலையங்களைத் திறப்பதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று கேட்கப்படுவதில்லை. இது மக்களாதரவையோபோராட்டங்களையோ சந்தித்திராத இயக்கங்கள் கட்சிகளிடம் முன்வைக்கப்பட வேண்டிய வினா. இவர்களுக்கு பல நிலையங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சி சேவைக்கென்றும் வீதிகளிலும் பணத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். இவர்களே கட்டாயம் கேள்வி கேட்கப்பட வேண்டியவர்கள்.
நஹ்ழா அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட மிகப் பெரும் இயக்கம். 30,000 பழைய அங்கத்தவர்களைக் கொண்ட அதன் ஒவ்வொரு அங்கத்தவரும் தமது மாதாந்த வருவாயில் 5வீதத்தைச் சேலுத்துகிறார்கள். இதன் அர்த்தம் நாங்களே எங்களுக்காக சேலவழிக்கிறோம் என்பதுதான். தமக்காக சேலவழிக்கும் இயக்கத்திடம் எங்கிருந்து பணம் பெறுகிறீர்கள் என்று எப்படி கேட்க முடியும்.
மக்கள் எமக்கு அஞ்சவில்லை. இயக்கம் தற்போது மக்கள் தரப்பிலிருந்து மிகப் பெரும் ஆதரவைக் காண்கிறது. எமது கணிப்பீட்டின் படி எம்மிடத்தில் சுமார் ஒரு மில்லியன் அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் எல்லா மட்டத்திலிருந்தும் எமக்கு ஆதரவு இருக்கும்போது வெளியிலிருந்து பணம் பெறுவதற்கு என்ன தேவை இருக்கிறது.
 

நன்றி: மீள்பார்வை

No comments:

Post a Comment