சென்னை: தமிழகத்தில் 22 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டில்லி தமிழ்நாடு இல்ல கூடுதல் ஆணையாளராக இருந்த ஜெ. பஜாஜ், ஆணையாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறுதொழில் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் மோகன் பியாரே, தொழிலாளர் நலத்துறை செயலராகவும், சிவில் சப்ளை கார்ப்., மேலாண் இயக்குநர் வீரசண்முக மணி, கருவூலத்துறை ஆணையாளராகவும், தொழில்வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் நிரஞ்சன் மார்டி, சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி செயலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
வேளாண் துறை ஆணையராக இருந்த சந்தீப் சக்சேனா, வேளாண் துறை செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கருவூலத்துறை ஆணையாளர் மணிவாசன், வேளாண் துறை ஆணையராகவும், தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநர் ராஜ்குமார், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலராகவும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை செயலர் சாந்தினி கபூர், சமூக சீர்திருத்த துறை செயலராகவும், சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சி செயலர் ஸ்ரீதர், பள்ளிக்கல்வித்துறை செயலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதே போல், எவரான் இந்தியா அறக்கட்டளை தலைமை அதிகாரி விக்ரம் கபூர், சுனாமி மறுவாழ்வு பணி திட்ட இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக உள்ள தயானந்த் கட்டாரியா, நில அளவை மற்றும் தீர்வை ஆணையராகவும், வேளாண் துறை செயலர் அருள் மொழி,பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராகவும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலர் ராஜேந்திர ரத்னு,மீன்வளத்துறை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு கேபிள் டி.வி., முன்னாள் மேலாண் இயக்குநர் ஜெயராமன், மாநில மனித உரிமை கவுன்சில் செயலாளராகவும், தொழில்துறை ஆணையர் மதிவாணன், சர்க்கரை துறை இயக்குநராகவும், தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண் இயக்குநர் ராஜீவ் ரஞ்சன், மின்வாரியத்துறை மேலாண் இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மின்வாரியத்துறை மேலாண் இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சிறுதொழில் வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநராகவும், டில்லி தமிழ்நாடு இல்ல ஆணையர் ஆனந்த், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை செயலராக இருந்த சபீதா, சிப்காட் மேலாண் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமை கவுன்சில் செயலராக இருந்த விவேகானந்தன், அரசு கேபிள் டி.வி., மேலாண் இயக்குநராகவும், சுகாதாரத்துறை துணை செயலராக இருந்த வள்ளலார், டாமின் மேலாண் இயக்குநராகவும், தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குநர் டேவிதார், தமிழ்நாடு சிமென்ட்ஸ் மேலாண் இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment