அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷனுக்கு செலவழித்த தொகை ரூ. 6.32 கோடி என மாநில தகவல் அறியும் உரிமைசட்டத்துறை செயலாளர் படேல் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தை சேர்ந்த வினோத்பந்த்யா நானாவதி கமிஷனுக்கு செலவழித்த தொகைகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்ட கேள்வி ஒன்றிற்கு அளித்துள்ள அறிக்கையில், கடந்த 2002-ம்ஆண்டு மார்ச் மாதம் நானாவதி கமிஷன் நியமிக்கப்பட்டது.
இந்தாண்டு கடந்த அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் 28லட்சத்து 900 ரூபாய் அரசு தரப்பு வக்கீ்ல்களுக்கான கட்டணமாகவும், 4 கோடியே 53லட்சத்து 54 ஆயிரத்து 700 ரூபாய் நீதிபதிகள் மற்றும் இதர ஊழியர்களுக்கு சம்பளமாகவும், ஒரு கோடியே 50 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் இதர செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச கட்டணமாக அரசு தரப்பு வக்கீலான அரவிந்த்பந்தயாவிற்கு சுமார் 14.23லட்சம் தரப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment