Wednesday 2 November 2011

அலிகர் பல்கலை கழக சென்டருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா?

மும்பை:மஹராஷ்ட்ரா மாநிலத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக சென்டர் நிறுவுவதை எதிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய நிலம் என்ற பெயரால் சென்டருக்கு நிலம் அனுமதிப்பதை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிராமவாசிகள் இதனை எதிர்த்தபொழுதிலும் அவர்களை தூண்டிவிட்டு பின்னணியில் செயல்படுவது சிவசேனா என கூறப்படுகிறது. வடக்கு மஹராஷ்ட்ராவில் மலேகானில் முதன் முதலாக அலிகர் முஸ்லிம் பல்கலை கழக சென்டர் நிறுவ நிலம் தெரிவுச்செய்யப்பட்டது.

அங்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஒளரங்காபாத்தில் குல்தாபாதில் நிலம் தெரிவுச்செய்யப்பட்டபோதிலும் அங்கும் எதிர்ப்பு கிளம்பும் என கருதப்படுகிறது.

மலேகானில் கஜவாரே கிராமத்தில் உள்ள நாம்பூரியில் அலிகர் பல்கலைக்கழக கேம்பஸிற்கு நிலம் தெரிவுச்செய்யப்பட்டது.ஆனால் அந்நிலம் விவசாய நிலம் எனவும் அங்கே கட்டிடம் கட்ட அனுமதிக்கமாட்டோம் எனவும் கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாஸிக் மாவட்டத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் வெல்ராசு, தொகுதி எம்.பியும் பூஜ்பாலின் உறவினருமான ஸமீர் பூஜ்பால், மாநில சிறுபான்மை கமிஷன்செயலாளர் ஸெய்யத் ஹாஷ்மி ஆகியோருடன் தெரிவுச்செய்த நிலத்தை பார்வையிட வந்த அலிகர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அப்துல் அஸீஸை ராமவாசிகள்
தடுத்ததோடு அவரையும், பல்கலைக்கழக பிரதிநிதிகளையும் நிலத்தை பார்வையிட அனுமதிக்கவில்லை.

இதனால் அவர்கள் திரும்பிச்செல்ல நேர்ந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேகானில் மோஸம் நதியின் இருபகுதியிலும் முஸ்லிம்களும், ஹிந்துக்களும்வசிக்கின்றனர்.முஸ்லிம்கள் நெசவுத்தொழிலை புரிந்துவருகின்றனர்.

அவர்களுகு நெசவுத்தொழிலுக்கு தேவையான பொருட்களையும், நெசவுச்செய்த ஆடைகளையும் வாங்குவது எதிர் புறம் வசிக்கும்
ஹிந்துக்கள் ஆவர். ஹிந்து சமூகம் வசிக்கும் பகுதியில்தான் அலிகர்
பல்கலைக்கழக சென்டருக்கு தேர்வுச்செய்யப்பட்ட நிலம் அமைந்துள்ளது.

இப்பகுதி சிவசேனா தலைவரும், அப்பகுதி எம்.எல்.ஏயுமான பாபு பூஸேவின் ஊராகும். கிராமவாசிகளின் எதிர்ப்பின் பின்னணியில் சிவசேனா செயல்படுவதாக மலேகான் முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

 அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வாய்ப்பு பட்டியலில் மற்றொரு பகுதியான
ஒளரங்காபாத்தில் குல்தாபாத்தை துணைவேந்தரின் தலைமையில் பிரதிநிதிக்குழு பார்வையிட்டது.அங்கேயும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

No comments:

Post a Comment