Thursday 23 June 2011

பொ‌றி‌யி‌ய‌ல் ரேங்க் பட்டியல் நாளை வெளி‌யீடு

பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான ரே‌ங்‌க் ப‌ட்டி‌யலை அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌ம் நாளை வெ‌ளி‌யிட உ‌ள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 494 பொ‌றி‌யிய‌ல் கல்லூரிக‌ளி‌ல் பி.இ., பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு வருடந்தோறும் அண்ணா பல்கலைக்கழகம் கல‌ந்தா‌ய்வு நடத்தி வருகிறது.



இ‌ந்தா‌ண்டு பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கு 1 லட்சத்து 48 ஆ‌யிர‌த்து 353 பே‌ர் ‌வி‌ண்ண‌‌ப்‌பி‌த்து‌ள்ளன‌ர். இந்த விண்ணப்பங்களுக்கு ரேண்டம் நம்பர் கடந்த 20ஆ‌ம் தேதி வழங்கப்பட்டது.

விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் பிளஸ்2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இ‌ந்த ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்ல அன்றே ரேங்க் பட்டியல் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தொழில்கல்வி மாணவர்களுக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 1ஆ‌ம் தேதி தொடங்கி 7ஆ‌ம் தேதி வரை நடைபெறுகிறது. 8ஆ‌ம் தேதி முதல் பொது கல‌ந்தா‌ய்வு நடைபெற உள்ளது. இந்த கல‌ந்தா‌ய்வு 35 நாட்கள் நடைபெற இருக்கிறது.

இந்தா‌ண்டு புதிய கல்லூரிகள் வந்துள்ளதால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் 20 ஆயிரம் பொ‌றி‌யிய‌ல் இடங்கள் காலியாக கிடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment