Muthupet PFI -- 23/June/2011
லிபிய அதிபர் கடாபியை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அமெரிக்கா தலைமையில் பன்னாட்டுப் படைகள் லிபியா மீது விமானங்கள் மூலம் குண்டு வீசி வருகின்றன. ஆனால் கடாபி பதவி விலக மறுத்து அமெரிக்காவின் தாக்குதலை சமாளித்து வருகிறார்.
இந்த நிலையில் லிபியாவுக்கு சொந்தமான அராப் துர்கிஷ் வங்கி, வட ஆப்பிரிக்க சர்வதேச வங்கி, வட ஆப்பிரிக்க வர்த்தக வங்கி ஆகிய 3 வெளிநாட்டு வங்கிகள் உள்பட 9 நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.
இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பாக்-லிபியா ஹோல்டிங் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனத்தில் லிபியாவின் பங்கு 50 சதவீதமும், பாகிஸ்தானின் பங்கு 50 சதவீதமும் உள்ளது.
அமெரிக்கத் தடையால் லிபியா அரசுக்குச் சொந்தமான கானா- லிபியா அராப் கோல்டிங் நிறுவனம், கிளாக்கோ ஹோட்டல்ஸ், நார்வேயன் ரசாயன நிறுவனம், லிபியன்- நார்வே உர நிறுவனம் ஆகியவை மற்ற நிறுவனங்களுடன் இனிமேல் வர்த்தகம் செய்ய முடியாது. இதனால் நிறுவனங்கள் நலிவடைந்து மூடவேண்டிய நிலை உருவாகும்.
இது பற்றி அமெரிக்க நிதி அமைச்சக வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் ஆடம் சூபின் கூறுகையில்,"உலக அளவில் செயல்படும் கடாபியின் நிறுவனங்களை தீவிரமாக கண்காணித்து அமெரிக்கா இந்த தடையை விதித்துள்ளது" என்றார்.
விதித்துள்ளது.

No comments:
Post a Comment