டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட
சிங்கூர் நிலத்தை மீண்டும் அரசே கையகப்படுத்தியது செல்லும் என்று கொல்கத்தா
உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முந்தைய இடதுசாரி அரசாங்கத்தால் சிங்கூர் நிலம் டாடா நிறுவனத்திற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மேற்குவங்கத்தில் ஆட்சியமைத்ததும், கடந்த ஜூன் மாதம் சிங்கூர் நிலத்தை கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டு அந்த நிலம் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனை எதிர்த்து டாடா நிறுவனம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிங்கூர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என இன்று தீர்ப்பு வழங்கியது.

No comments:
Post a Comment