Wednesday 28 September 2011

ஹைதராபாத்:பொறியியலுக்​கான பொது நுழைவுத் தே​ர்வில் முதல் இடம் பிடித்த செயீத் ஷதாப்

ஹைதராபாத்:ஆந்திர மாநில பொறியியல் பொது நுழைவுத் தேர்வில் செயீத் ஷதாப் என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

ஜவஹர்லால் நேரு பாலிடெக்னிக் இன்ஜினியரிங் கல்லூரியின் மாணவியான இவர் பொறியியல் பொது நுழைவுத்தேர்வில் முதலிடம் பிடித்தமைக்காக, பாலிடெக்னிக் படிப்பிற்கான, சிறந்த மாணவிக்கான விருது ‘பொறியாளர் கோடி சீதா தேவி’ என்னும் விருதை ஆந்திர அரசு இவருக்கு வழங்கியது. 


அவருக்கு கிடைக்கப் பெற்ற அந்த விருதில், ரூ: 5000/-, ஒரு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழும் அடங்கும். இதனைத் தொடர்ந்து இவருக்கு ஒஸ்மானியா பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பும் கிடைத்துள்ளது.

தனது பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை அதிக மதிப்பெண் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற ஷதாப்பிற்கு நீண்ட ஆசை ‘இந்தியன் பொறியியல் துறையில்’ அதிகாரி ஆவதே. தன் படிப்பின் மூலமும், தனது இந்த வெற்றியின் மூலமும் தனது தாயின் பொது நல சேவையில் ஈடுபட்டு தனது மத மக்களுக்காக சேவை புரிய வேண்டும் என்றும், படிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்வழி வகுப்பதுவுமே தன்னுடைய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment