Wednesday 28 September 2011

சிரியாவில் தொடரும் ஆர்ப்பாட்டம்

சிரியா அரசுக்கு எதிரான மக்கள் ஆர்பாட்டத்தில் இதுவரை 2800 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பஷர் அல் அசத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் மீது அரசு இராணுவ அடக்கு முறையை ஏவி விட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாக்கி வருகின்றது.


இன்று ரஸ்தான் மற்றும் தல்பீசா ஆகிய நகரங்கள் மீது சிரியா இராணுவம் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது பலர் கொல்லப்பட்டுள்ளனர் குறித்த நகரங்கள் சுற்றிவளைக்கப் பட்டு தாக்குதல் இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றது.

சில தினங்களுக்கு முன்னர் ஜெனீவா நகரில் ஐநா.மனித உரிமைகள் கவுன்சிலின் 18 வது கூட்டம் துவங்கிய போது . உரையாற்றிய கமிஷனர் நவநீதம் பிள்ளை நம்பத் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த மார்ச் மாத நடுவில் துவங்கி இதுவரை சிரியாவில், 2,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சிரியா தொடர்பாக நடந்த கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில், 2,200 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிபிடத்தக்கது அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சிரிய இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு முக்கிய பங்காற்றிவருவதாக அரசு தரப்பு தெரிவித்து வருகின்றது. 

பஷர் அல் அசத் அரசு பல அரசியல் சீர்திருதங்களை வாக்களித்த போதும் இவைகள் கடந்த காலங்களை போன்று அரசாங்கத்தின் ஏமாற்று வேலை என்று தெரிவித்துள்ள மக்கள் தொடந்தும் போராடி வருகின்றனர்.

No comments:

Post a Comment