போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது
எனவே தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டே வேட்பு மனுவை
நிராகரித்தது தெரிய வந்தது. இந்த தகவல் வெளியானதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், SDPI யின் மாநிலபொதுச் செயலாளர்கள், நெல்லை முபாரக், பி. அப்துல் ஹமீது மற்றும் இஸ்லாமிய சமுதாய ஒருங்கிணைப்பாளர் ஹனிபா,சுன்னத் ஜமாத் தலைவர் மேலை.நாசர், தேசியலீக் தலைவர்,தடா ரஹீம் ஆகியோர் உடனடியாக மாநகராட்சி ரிப்பன் பில்டிங் வந்தனர்.
இதே போல் ஏராளமான SDPI தொண்டர்கள், விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கில்
அங்கு குவிந்தனர். இதனால் காவல் துறை அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டதால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து தொல் திருமாவளவன் அவர்களும், SDPI யின் நிர்வாகிகளும்,தேர்தல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதே போல் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே கூடிய SDPI , விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணியினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வேட்பு மனு ஏற்று கொண்டதை அடுத்து நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தனர்
No comments:
Post a Comment