எகிப்து புரட்சி ஏற்பட்டு ஏழு மாதங்கள் கடக்கும் நிலையில் எதிர்வரும் நவம்பர் 28 ஆம் தேதி புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு
செய்வதற்கான தேர்தல்கள் நடைபெறும் அதை தொடர்ந்து ஜனாதிபதியை தேர்வு
செய்யவதற்கான தேர்தல் இடம்பெறும் அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு
அவைகளுக்கான வேட்பாளர் பதிவுகளை அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தொடக்கம்
தேர்தல் அலுவலகத்தில் மேற்கொள்ளமுடியும் என்று எகிப்தின் இராணுவ நிர்வாகம்
அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 28.09.2011 புதன்
கிழமை எகிப்தின் 59 அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் இணைந்து. இராணுவ
நிர்வாகம் தேர்தல் சட்டத்தில் மாற்றம் ஒன்றை கொண்டுவரவேண்டும் அல்லது
தேர்தல்களை பகிஸ்கரிக்க போவதாக அறிவித்துள்ளதுடன் தற்போது நாட்டை ஆளும்
இராணுவ நிர்வாகத்துக்கு எதிர்வரும் ஞாயிற்கு கிழமை வரை அவகாசமும்
வழங்கியுள்ளது .
அறிவிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல்
சட்டத்தின் பிரகாரம் புதிய பாராளுமன்றம் மேற்சபை, கீழ்சபை என்ற இரண்டு
அவைகளை கொண்டிருக்கும் இவை இரண்டுக்குமான மூன்றில் இரண்டு பங்கு
ஆசனங்களுக்கு தேர்தல்கள் மூலம் எகிப்து மக்களினால் பிரதிநிதிகள் தேர்வு
செய்யப்படுவார்கள். எஞ்சும் இரண்டு அவைகளின் மூன்றில் ஒரு பங்கு
ஆசனங்களுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்த பிரதான காரணம் .
இதில் மூன்றில் ஒரு பங்கு ஆசனங்களுக்கு
பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்ற வாசகம் அரசியல் கட்சிகள் மத்தியில்
பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றுக்கு ஹுஸ்னி முபாரக்கின்
ஆதரவாளர்கள் அல்லது வேறு வெளிநாட்டு நலன்களை பேணும் நபர்கள்
நியமிக்கப்படலாம். என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு இஹ்வானுல் முஸ்லிமீன்
அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி Freedom and
Justice Party (FJP) உட்பட எகிப்தின் 59 அரசியல் கட்சிகள், மற்றும்
அமைப்புகள் கூட்டாக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த சட்டம் மாற்றப்படாத நிலையில் தாம்
தேர்தல்களை பகிஸ்கரிக்கப் போவதாக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளது. ஆனால்
இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல்
கட்சி தேர்தலை பகிஸ்கரிக்கும் நிலைப்பாட்டை எடுக்காது என்று அதன் முக்கிய
தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த சட்டம் மாற்றப்படவேண்டும்
என்பதும், குறித்த தேதிகளில் தேர்தல்கள் இடம்பெற்று விரைவாக மக்களால் தேர்வாவாகும் பிரதிநிதிகளிடம் எகிப்து நிர்வாகம் ஒப்படைக்கப் படவேண்டும்
என்பதில் இஹ்வானுல் முஸ்லிமீன் கூடிய கரிசனை கொண்டுள்ளது என்றும் அவர்கள்
தெரிவித்துள்ளனர் .
இதேவேளை எகிப்திய மக்களில் 35 வீதமானவர்கள்
இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்புக்கு ஆதரவாக உள்ளதாக எகிப்தில்
மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றது.
நடைபெறபோகும் தேர்தல்களில் ஹுஸ்னி
முபாரக்கின் தேசிய ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் பங்குகொள்ள முடியாது
என்று இராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோன்று எகிப்து இராணுவத்தின்
முக்கிய உறுப்பினர்களுக்கு தேர்தல்களில் பங்குகொள்ளும் எண்ணம் இல்லை என்று
அறிவிக்கபட்டுள்ளது.
இருந்த போதும் இன்று இராணுவ நிர்வாகத்தின்
தளபதி தந்தாவி சிவிலியன் உடையில் எகிப்து தலைநகரின் சந்தைப் பகுதிக்கு
பாதுகாப்பு இன்றி விஜயம் செய்வதையும் அதை எகிப்து தேசிய தொலைக்காட்சி பதிவு
செய்து முக்கியத்துவத்துடன் காட்சிப் படுத்தியமையும் இஹ்வானுல் முஸ்லிமீன்
உட்பட அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாயில் சூப்பி வைத்துகொண்டா அமெரிக்காவும் மேற்கும் இருக்க போகின்றது ?
பொறுத்திருந்து பார்ப்போம்.
”யார் நிர்வாக ஆசனத்தில் அமர்ந்தாலும்
இயக்குவது நாமாக இருக்கவேண்டும்” என்று வெறும் திரைக்கதை வசனங்கள் பேசும் சக்தியல்ல மேற்குலகம்.
No comments:
Post a Comment