Saturday, 1 October 2011

உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது? ஓர் கண்ணோட்டம்

உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படும் குற்றம், குறைகளை மற்றும் தேர்தல் தொடர்பான மற்ற புகார்கள் பெற மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க மாநில தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதல்கட்டமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்துள்ளது.


இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேறக் கழகம், தமிழ்நாடு கொங்கு பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் போட்டியிடுகிறது. மாற்று கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே போல் விடுதலை சிறுத்தை கட்சியுடன் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் 14  இஸ்லாமிய  அமைப்புகள், 6 கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து போட்டி இடுகின்றன...   

மற்றொரு கூட்டணியாக தமிழக பா.ஜ.க.வும், கொங்கு நாடு மக்கள் கட்சியும் இணைந்து களமிறங்குகிறது. மேலும், தி.மு.க., காங்கிரஸ், புதிய தமிழகம், , பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. போன்ற கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றது.

இந்நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பணம், வேஷ்டி, சேலை, கறி விருந்து என விதிமுறைகளை மீறி செயல்படலாம் என நேர்மையான அரசியல் கட்சிகளிடையே அச்சம் நிலவி வருகின்றது. இந்த தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நடைபெற வேண்டும் என
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

தேர்தல் குறித்த புகார் மனுக்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தெரிவிக்க மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் மொபைல் போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தல் குறித்த புகார்களை மாவட்ட அளவில் தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டரிடமும், சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மாநில அளவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையரிடமும், நகராட்சி நிர்வாக ஆணையரிடமும் மற்றும் பேரூராட்சி இயக்குநரிடமும் வழங்கலாம். மேலும், அனைத்து புகார்களும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல்
ஆணையத்திடம் வழங்கலாம்.

தேர்தல் குறித்த புகார் மனுக்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தெரிவிக்க மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்களது மொபைல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

அரியலூர் - அனுஜார்ஜ் - 9047992233,

கோவை -எம். கருணாகரன் - 9444168000,

கடலூர் - வி.அமுதவல்லி - 9444139000,

தருமபுரி - ஆர். லில்லி - 9444161000,

திண்டுக்கல் - கே.நாகராஜன் - 9444169000,

ஈரோடு -வி.கே.சண்முகம் - 9444167000,

காஞ்சிபுரம் -எஸ்.சிவசண்முகராஜ் - 9444134000,

கன்னியாகுமரி - எஸ்.மதுமதி - 9444188000,

கரூர் - வி.ஷோபனா - 9444173000,

கிருஷ்ணகிரி - சி.என்.மகேஷ்வரன் - 9444162000,

மதுரை - சகாயம் - 94441 71000,

நாகப்பட்டிணம் டி.முனுசாமி - 9444176000,

நாமக்கல் - ஜெ.குமரகுருபரன் - 9444 163000,

பெரம்பலூர் - தரேஜ் அகமது - 9444175000,

புதுக்கோட்டை - பி.மகேஷ்வரி - 9444181000,

ராமநாதபுரம் - வி.அருண்ராய் - 9444183000,

சேலம் - கே. மகரபூஷணம் - 9444164000,

சிவகங்கை - வி.ராஜாராமன் - 9444182000,

தஞ்சாவூர் - கே.பாஸ்கரன் - 9444179000,

நீலகிரி - அர்ச்சனா பட்நாயக் - 9444166000,

தேனி - கே.எஸ்.பழனிசாமி - 9444172000,

திருவள்ளூர் - ஆஷிஷ்சட்டர்ஜி - 944413 2000,

திருவாரூர் - சி.முனியானந்தன் - 9444178000,

தூத்துக்குடி - ஆஷிஷ்குமார் - 9444 186000,

திருச்சி - ஜெயஸ்ரீ முரளிதரன் - 9444174000,

திருநெல்வேலி - ஆர்.செல்வராஜ் - 9444 185000,

திருப்பூர் - எம். மதிவாணன் - 9442200909,

திருவண்ணாமலை - அன்சூல் மிஸ்ரா - 9444137000,

வேலூர் - எஸ்.நாகராஜன் - 9444135000,

விழுப்புரம் - சி.டி.மணிமேகலை - 9444138000,

விருதுநகர் - எம்.பாலாஜி - 9444184000

ஆகிய எண்களிலும், சென்னைக்கு மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயனை 9445190999 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாநில தேர்தல் ஆணையத்தை, தமிழக மாநில தேர்தல் ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, (சி.எம்.பி.டி. எதிரில்) அரும்பாக்கம்,

சென்னை- 600 106 என்ற முகவரியிலும், 044- 24753001, 2475 3002 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-2475 3300, 2475 1870 என்ற தொலை நகல் எண் மூலமும், tnsec@tn.nic.in என்ற இணைய தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment