ஜிமெயிலில் உங்களுக்கு எம்.எஸ் ஆபிஸ் டாக்குமென்ட் கிடைக்கப் பெற்றால்
அவற்றை டவுண்லோட் செய்ய அல்லது கூகுள் டாக்குமென்டில் திறக்கவும் முடியும்.
உதாரணத்திற்கு குறிப்பிட்ட எம்.எஸ் வேர்ட் கோப்பை ஜிமெயிலில் பார்வையிட முடிவது சிறந்த வசதியாகும் ஏனெனில் அக்கோப்பை ஹாட்டிஸ்க்கில் சேமிப்பதா அல்லது வேண்டாமா என முடிவெடுக்கலாம்.
ஆனால் அக்கோப்பை திறந்து படிக்க நேரமில்லாத போது அதை கணினியிலும் சேமிக்க விரும்பவில்லை என்றால் என்ன செய்யலாம்?
மின்னஞ்சலை அன்ரீட் செய்து பின்னர் படிக்கலாம். இன்னுமொரு இலகு வழியும் உண்டு குறிப்பிட்ட கோப்பை கூகுளின் டாக்குமென்டில் சேமித்துவைத்து பின்னர் பார்வையிடலாம்.
இதற்கு
Gmail Attachments To Docs எனும் Chrome extension உதவுகிறது.
இதை நிறுவியதும் ஜிமெயிலில் வரும் எம்.எஸ் கோப்புடன் புதிதாக
save to Google Docs என்ற வசதி உருவாகும்.
அதை அழுத்தியதும் சேமிப்பை உறுதிப்படுத்த புதிய விண்டோ திறந்து அதில் தகவல் தெரிவிக்கப்படும்.
டவுண்லோட் செய்வதற்கு
https://chrome.google.com/webstore/detail/epoohehjbaenldfbahgcegdmlogakgin?hl=en-US
No comments:
Post a Comment