Monday, 8 August 2011

தலிபான்களின் ஒரே தாக்குதலில் அதிக அமெரிக்க படையினர் படுகொலை

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரின் ஹெலிகாப்டர் ஒன்றை தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதில், 31 நேட்டோ படையினர் உட்பட, 38 பேர்
பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வாந்துக் மாகாணத்தில், ஹெலிகாப்டர் சென்ற போது இத்தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு உடனடியாக தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நிலைகொண்டுள்ள 10 வருடங்களில் ஒரே தாக்குதலில் இவ்வளவு அதிகமான அமெரிக்க படைகள் கொல்லப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம், ஈராக் அன்பார் மாகாணத்தில் நடைபெற்ற விபத்து ஒன்றின் போது 30 அமெரிக்க படைகள் கொல்லப்பட்டிருந்தனர்.

No comments:

Post a Comment