Monday, 8 August 2011

கலவரத்தினால் தீயிட்டு கொளுத்தப்பட்ட வடக்கு லண்டன்!

வடக்கு லண்டனின் டோடன்ஹாம் நகரில் நேற்று காவற்துறையினரின் கவனயீன செயல் ஒன்றுக்கு நீதிகேட்டு, இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்த்து.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் மார்க் டகன் எனும் 29 வயது இளைஞர் மெட்ரோ போலியன் காவற்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு தவறுதலான நடவடிக்கை என குற்றம் சாட்டி குறித்த நபரின் தந்தை நீதிகேட்டு போராடத்தொடங்கினார். அவருக்கு ஆதரவாக டோடன்ஹாம் நகர மக்கள் ஒன்றினைந்து சுமார் 500 க்கு மேற்பட்டோர் குறித்த காவற்துறை நிலையத்தை முற்றுகையிட்டனர்.


இதன் போது போலிஸாருக்கும், ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. நகர்தெருக்களில் அமைந்திருக்கும் கடைகள், ஆர்ப்பாட்ட காரர்களினால் அடித்து நொறுக்கப்பட்டன. போலிஸாரின் கார்கள் உட்பட பல வாகனங்கள் தியீட்டு கொளுத்தப்பட்டன.

போலிஸ் கார் கொளுத்தப்பட்ட புகைப்படம் டுவிட்டர் மூலம் 100க்கு மேற்பட்ட தடவை ரீடுவீட் செய்யப்பட்டு ஆர்ப்பாட்டம் பற்றி தகவல் அயலவருக்கும் பரப்பபட்டது. அருகிலிருந்த மேக்டோனால்ட் உணவகத்திற்குள் சட்டவிரோதமாக  புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு சொந்தமாக தாமே உணவு சமைக்கத் தொடங்கிய சம்பவம் கூட நடந்தது. 

இக்கலவரங்களின் போது 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒரு வழியாக நள்ளிரவுக்கு பின்னர் கலவரத்தை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


சாதாரணமாக டோடன்ஹாம் பிரதேசவாசிகளுக்கும் தமக்கும் நல்ல உறவே நிலவி வருவதாகவும், இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னரே பதற்ற நிலை திடீரென அதிகரித்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment