Monday 8 August 2011

பணக்கொல்லையர்கள் ஒரு பக்கம்! ஏழைகள் மறுபக்கம்!



அண்மையில் பிரதமரே வியந்து போனார் எனும் அடைமொழியோடு கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்ப சொத்துப் பட்டியல் என்று ஒன்று வெளியாகி உலாவந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கருப்புப் பண பட்டியல் என்று அசாஞ்சே ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறார். பட்டியல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் ……. ?


உழைத்த களைப்பும் வெளியேறிய வியர்வையும் ஒரு தேநீர் வேண்டும் என்று தொண்டையில் போராட்டம் நடத்த அனிச்சைச் செயலாய் சட்டைப்பையை தடவிப்பார்த்துவிட்டு எச்சில் விழுங்கி சமாதானமடையும் எண்பது கோடிப்பேர் உலவும் இந்நாட்டில், இவர்களை மனிதர்கள் என்றா கூறமுடியும்?

இது “தி அதர் சைட்” எனும் மாத இதழ் வெளியிட்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியல்

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.
21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
விக்கிலீக்ஸ் அசாஞ்சே வெளியிட்ட கருப்புப் பண பட்டியலை கீழுள்ள படத்தை சொடுக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த சொத்துப்பட்டியல்
அசையும் சொத்துக்கள்
1. கையிருப்பு ரொக்கம்- 25,000 ரூபாய்
2. பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டிபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டிபாசிட் மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்பில் உள்ளது. இவை சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
3. பாண்டுகள், கம்பெனிகளில் பங்கு முதலீடு-50,000 ரூபாய். இவையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது.
4. சொந்தமான வாகனங்களில் மொத்த மதிப்பு 8.35 லட்சம் ரூபாய்.
5. நிறுவனங்களில் முதலீடுகள் விவரம்:
* ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ்-8.5 கோடி ரூபாய்.
* சசி எண்டர்பிரைஸஸ்-75 லட்சம் ரூபாய்.
* கோட நாடு எஸ்டேட்-1 கோடி ரூபாய்.
* ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட்-65 லட்சம் ரூபாய் 
உட்பட நிறுவனங்களில் முதலீட்டின் மொத்த மதிப்பு 10.9 கோடி ரூபாய். 
அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979 ரூபாய்.
அசையாச் சொத்துக்கள் :
* ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.1968. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.
* செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கியபோது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
*  79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கியபோது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.
* 8-3-1099 மற்றும் 8-3-1099-ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கிய தேதி: 11.02.1967. வாங்கிய போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.
* ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கியபோது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.
* எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.
* 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கியபோது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். 
அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.
நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்படவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா கொடுத்த சொத்துப்பட்டியல் இது ஜெயலலிதா தன்னுடைய பெயரில் மட்டும் இருக்கும் சொத்துக்களை தேர்தல் விதிமுறைகளுக்காககொடுத்த விபரம், இன்னும் மன்னார்குடி வகையறாக்கள் பின்னால் இருப்பதை துருவினால் தமிழகமே அதில் ஒழிந்திருக்கும்.

இப்படி இவர்கள் கூறுகட்டி கொள்ளையடிக்க அனுமதிக்கும் ஒரு அமைப்பை மக்களாட்சி என்று சொல்லும் துணிவு இன்னும் யாருக்காவது எஞ்சியிருக்கிறதா?

No comments:

Post a Comment