புதுடெல்லி : இந்தியாவில்
போலி என்கவுண்டர் நாடகங்கள் மூலமாக நிரபராதிகள் அதிகமாக வேட்டையாடப்படும்
முதல் மாநிலம் செல்வி.மாயாவதி ஆளும் உத்தரபிரதேசமாகும். இரண்டாவது இடத்தில்
மணிப்பூர் உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் தனிப்பட்ட காரணங்களை
பாதுகாப்பதற்காக போலீஸார் உ.பியில் 120 பேரை கொலைச் செய்துள்ளனர். தேசிய
மனித உரிமை கமிஷன் முன்பாக வெளிவந்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே இவை.
இவ்வாண்டு 6 பேர் இதே முறையில் கொல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் புகார்
அளித்துள்ளதாக தேசிய மனித உரிமை கமிஷன் கூறுகிறது.
கடந்த ஆண்டு 40உம், அதற்கு முந்தைய ஆண்டு 71
குடும்பங்களிலிருந்து அவர்களுடைய உற்றார், உறவினர் கொல்லப்பட்டதாக
புகார்கள் கிடைத்துள்ளன என கமிஷன் தெரிவிக்கிறது.
ராணுவத்தினரின் சிறப்பு அதிகாரம் அமுலில்
இருக்கும் மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு இடையே 54 பேர் கொல்லப்பட்டனர்.
2008 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை இந்தியாவில் இத்தகைய 369
வழக்குகளை தேசிய மனித உரிமை கமிஷன் ரிப்போர்ட் செய்துள்ளது.
இவற்றில் 98
வழக்குகள் மட்டுமே கமிஷனால் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 271
வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கி கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல
வழக்குகளிலும் நான்கரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கமிஷன்
உத்தரவிட்டிருந்தது.
பதவி உயர்வையும், விருதுகளை மோகித்தும்
நிழலுக தாதாக்களுக்காகவும் நிரபராதிகளை பயங்கரவாதிகள் என்ற முத்திரையை
குத்தி போலி என்கவுண்டர்களை நடத்தி கொலைச் செய்வது கஷ்மீரிலும்,
குஜராத்திலும் ரிப்போர்ட் செய்ப்பட்டுள்ளது.
சில வழக்குகளில் குற்றவாளிகள்
மீது நீதிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. குஜராத்தில் சொஹ்ரபுத்தீன்
ஷேக், இஷ்ரத் ஜஹான், பிரஜாபதி ஆகிய போலிஎன்கவுண்டர் வழக்குகள்
உச்சநீதிமன்றத்தின் கண்கானிப்பில் உள்ளன.
No comments:
Post a Comment